fbpx
Take a fresh look at your lifestyle.

மீண்டும் கலக்க தயாராகும் பிரபுதேவா …மகிழ்ச்சியில் ரசிகர்கள் ..!

நடிகர், இயக்குனர், நடன அமைப்பாளர் என பலதரப்பட்ட பரிமாணங்களில் பிரகாசித்த பிரபுதேவா சில காலங்கள் படங்கள் எதுவும் இல்லாமல் இருந்தார். இப்போ மீண்டும் தனது ஆட்டத்தை ஆரம்பித்துவிட்டார்.

அடுத்ததாக நடிப்பதற்கு ஒப்பந்தமாகியிருக்கும் படம் போலீஸ் கதையாம். ஏ.சி.முகில் இயக்க ஜபக் மூவீஸ் எனும் நிறுவனம் தயாரிக்கின்றது. டி.இமான் இசை பொறுப்பேற்றிருக்கிறார்.

இன்னமும் பெயரிடப்படாத இந்த படத்தில் பிரபுதேவாவுக்கு ஜோடியாக நிவேதா பெத்துராஜ் நடிக்க மகேந்திரன், சுரேஷ்மேனன் என பல திரை நட்சத்திரங்களும் இணைகின்றனர். இந்த பட்டாளம் போதாது என பாகுபலியில் காலகேயர் தலைவனாய் நடித்த பிரபாகர் வில்லனாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாம்.

புத்தம் புதிய பாடல்கள், என்றும் இனிக்கும் இசைஞானியின் இனிய கீதங்கள், மனதை மயக்கும் மெலடிப் பாடல்கள், மிகத் துல்லியமான ஒலித் தெளிவில் கேட்டு மகிழ இங்கே உள்ள Live Radio Button இல் க்ளிக் செய்யுங்கள்