fbpx
Take a fresh look at your lifestyle.

ஹாசினி, மற்றும் பெற்ற தாயையே கொலை செய்த தஷ்வந்திற்கு உயர் நீதிமன்றின் அதிரடி தீர்ப்பால் பரபரப்பு…!

தமிழ்நாடே கதறி துடித்த கொடூரம் எது என்று கேட்டால் கண்டிப்பாக ஒட்டு மொத்த மக்களும் சொல்லும் ஒரே விடயம் சிறுமி ஹாசினி கொலை தான் . பக்கத்து வீட்டு சிறுமியான 7 வயது ஹாசினியை துடிக்க துடிக்க கற்பழித்து கொலை செய்து எரித்திருந்தான் ஒரு கொடூரன்..

அவன் பெயர் தஷ்வந்த்..2017ம் ஆண்டு 2ம் மாதம் 27ம் திகதி இந்த கொடூரத்தை நிகழ்த்தி இருந்தது இந்த மிருகம்..! அதனை தொடர்ந்து குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப் பட்ட தஷ்வந்த பிணையில் வெளியே வந்தான். பச்சிளம் குழந்தையை பதம் பார்த்த மிருகம் பெற்ற தாயையும் பதம் பார்த்தது.

பெற்றவள் என்று கூட பார்க்காது அவளையும் கொன்று விட்டு தப்பியோடி பொலீஸாரிடம் பிடிபட்டது. இதனை தொடர்ந்து புழல் சிறையில் அடைக்கப்பட்டு பின் காஞ்சிபுரம் நீதி மன்று தூக்கு தண்டனை தீர்ப்பளித்தது. என்னை கேட்டால் இதைவிட பெரிய தண்டனை கொடுத்திருப்பேன் .

ஆனால் இந்த தண்டனைக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப் பட்டது. இந்த மனுவை சற்று முன்னர் உயர் நீதிமன்ற நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர். காஞ்சிபுரம் நீதிமன்றத்தின் தீர்ப்பில் சந்தேகமில்லை அது சரியான தீர்பே என தீர்ப்பு அளித்துள்ளது..

புத்தம் புதிய பாடல்கள், என்றும் இனிக்கும் இசைஞானியின் இனிய கீதங்கள், மனதை மயக்கும் மெலடிப் பாடல்கள், மிகத் துல்லியமான ஒலித் தெளிவில் கேட்டு மகிழ இங்கே உள்ள Live Radio Button இல் க்ளிக் செய்யுங்கள்