fbpx
Take a fresh look at your lifestyle.

இலங்கை வீரர் தனஞ்ஜெய சில்வா வருத்தம் – தென்னாபிரிக்க இலக்கில் குறியாய் இருந்ததால் சதத்தை தவறவிட்டதால்.

அண்மையில் நடந்து முடிந்த இலங்கை தென்னாபிரிக்க அணிகளுக்கிடையிலான 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் போட்டித் தொடரின் இரண்டு போட்டிகளில் வெற்றியீட்டிய தென்னாபிரிக்கா மூன்றாவது போட்டியிலும் இலங்கையை 78 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வென்றது. நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்றிருந்த இலங்கை அணி பந்து வீச்சைத் தெரிவு செய்திருந்தது. எனினும் தென்னாபிரிக்க வீரர்களின் அதிரடி ஆட்டத்தில் தென்னாபிரிக்க அணி 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 363 ஓட்டங்கள் பெற்றிருந்தமையும், பின்னர் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி ஆரம்பத்திலேயே விக்கெட்டுகளை இழக்கத் தொடங்கி 45.2 ஓவர்களில் 285 ஓட்டங்களுக்கு ஆல் – அவுட் ஆனதும் தெரிந்ததே.

LIKE & FOLLOW US ON FACEBOOK

!!இந்தப் பதிவு உங்களுக்குப் பிடித்தால், கீழே உள்ள Facebook Button இல் க்ளிக் செய்து உங்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்!!

இந் நிலையில் வழக்கமாக ஆறாவது வரிசையில் களமிறங்கும் இலங்கை வீரர் தனஞ்ஜெய அன்றைய போட்டியில் ஏழாவது வரிசையில் களமிறங்கியமைக்கான காரணம் பற்றி வினவப்பட்டது.  அதற்கு அச்சமயத்தில் அணிக்கு வலக்கை வீரர் இடக்கை வீரர் ஆகியோரது இணை முன்னதாகவே தேவைப்பட்டது. அதனாலேயே நான் 7 வது வரிசையில் களமிறங்கினேன். எனது சதம் தவற விடப்பட்டமைக்கு இதுவே காரணமாய் அமைந்தது. ஏனெனில் கீழிறங்கி ஆடும்போது சதம் அடிக்கும் வாய்ப்பு குறைந்து போகின்றது, நான் ஒருநாள் போட்டிகளில் 6 வது 7வது வரிசைகளில் களமிறங்க வேண்டுமென்று விரும்பியிருந்தேன். அதற்கான பயிற்சிகளை எடுத்து விளையாடியிருக்க வேண்டும். என்று குறிப்பிட்டார்.

அந்த மைதானம் 350 ஓட்டங்களுக்கு மேல் குவிக்கக் கூடியது என்றும் விக்கெட்டுக்களை விரைவாக இழந்ததால் எங்களுக்கு அது கடினமாக அமைந்துவிட்டது என்றும் தனஞ்ஜெய குறிப்பிட்டார்.

மிகத் துல்லியமான ஒலித் தெளிவில் தமிழில் ஓர் ரேடியோ… கேட்டு மகிழ இங்கே க்ளிக் செய்யுங்கள்

அன்பிற்கினிய நேயர்களே… எமது செய்திச் சேவை பிடித்தால், மேலும் செய்திகளை அறிந்து கொள்ள Puradsifm எனும் எமது பேஸ்புக் பக்கத்தினை மறக்காது லைக் செய்யுங்கள், செய்தி பற்றிய உங்கள் எண்ணக் கருத்துக்கள், குறை நிறைகளைப் பகிர்ந்திட இங்கே க்ளிக் செய்யுங்கள்