fbpx
Take a fresh look at your lifestyle.

சர்ச்சையில் சிக்கியுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் – அணியிலிருந்து நீக்கப்படுவாரா?

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் துணைக் கப்டனாக இருந்தவர் அவ் அணியின் சிறந்த பல்துறை ஆட்டக்காரரான பென்ஸ் ஸ்டோக்ஸ். இவர் அண்மையில் மது போதையில் இரவு விடுதி ஒன்றில் இரு நபர்களுடன் தகராறில் ஈடுபட்டு தாக்கியதாக எழுந்த குற்றச்சாட்டை அடுத்து இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்தால்  துணைத் தலைவர் பதவி பறிக்கப்பட்டு அணியிலிருந்து தற்காலிகமாக விலக்கி வைக்கப்பட்டார். அப்போது அவுஸ்திரேலியாவுக்கு எதிராக இடம்பெற்ற ஆஷஸ் தொடரில் இவர் பங்குபற்றுவதற்கும் தடை விதிக்கப்பட்டது.

LIKE & FOLLOW US ON FACEBOOK

!!இந்தப் பதிவு உங்களுக்குப் பிடித்தால், கீழே உள்ள Facebook Button இல் க்ளிக் செய்து உங்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்!!

எனினும் தன்மீது எந்தக் குற்றமும் இல்லை என இவர் உறுதியாக நம்பியதாலும், இவரது குற்றம் நிரூபிக்கப்படாததாலும் நியூசிலாந்து அணிக்கெதிரான தொடரில் இவர் இணைத்துக்கொள்ளப்பட்டார். தற்போது இவருக்கு எதிரான வழக்கு மிண்டும் விசாரணைக்கு வந்துள்ள நிலையில் இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விளையாட மாட்டார் என இங்கிலாந்து அறிவித்துள்ளது. தற்போது ஸ்டோக் ஒருவரைத் தாக்குவது போன்ற புதிய காணொளி ஒன்று பரவி வருவதால் வழக்கு ஸ்டோக்கிற்கு பாதகமாக அமையும் பட்சத்தில் அவரது கிரிக்கெட் எதிர்காலம் பாதிக்கப்பபடலாம் என அவதானிகள் குறிப்பிடுகின்றனர்.

மிகத் துல்லியமான ஒலித் தெளிவில் தமிழில் ஓர் ரேடியோ… கேட்டு மகிழ இங்கே க்ளிக் செய்யுங்கள்

அன்பிற்கினிய நேயர்களே… எமது செய்திச் சேவை பிடித்தால், மேலும் செய்திகளை அறிந்து கொள்ள Puradsifm எனும் எமது பேஸ்புக் பக்கத்தினை மறக்காது லைக் செய்யுங்கள், செய்தி பற்றிய உங்கள் எண்ணக் கருத்துக்கள், குறை நிறைகளைப் பகிர்ந்திட இங்கே க்ளிக் செய்யுங்கள்