fbpx
Take a fresh look at your lifestyle.

வலிமையான மற்றும் நீளமான முடியை பெற இந்த இரண்டுமே போதும்

தலைக்கு எப்படி குளிக்க வேண்டும், எத்தனை நாட்களுக்கு ஒருமுறை குளிக்க வேண்டும். அதன் பின்னர் தலைக்கு வாரத்தில் ஒரு முறையாவது மாஸ்க் போட வேண்டியது அவசியமாகும்..

LIKE & FOLLOW US ON FACEBOOK

தேங்காய் எண்ணெய்யை நன்றாக சூடேற்றி, அதனை ஆற வைத்து தலைக்கு தடவி, நன்றாக வட்ட வடிவத்தில் சிறிது நேரம் மசாஜ் செய்யுங்கள். பின்னர் 30 நிமிடங்கள் ஊற வைத்து, தலைக்கு குளிக்க வேண்டும். இவ்வாறு செய்து வந்தால் தலைமுடி நல்ல நீளமாகவும், அடர்த்தியாகவும் வளரும். தலைக்கு எண்ணெய் தேய்த்துக் கொண்டு தலைக்கு குளிப்பதினால் முடி உதிர்வு குறையும். மேலும் கூந்தல் சிக்கல் விழுகாது.

!!இந்தப் பதிவு உங்களுக்குப் பிடித்தால், கீழே உள்ள Facebook Button இல் க்ளிக் செய்து உங்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்!!

செம்பருத்தி இலையை நன்றாக அரைத்து அதன் சாறை தலைமுடிக்கு அப்ளை செய்து கழுவினாலும் கூந்தல் மிருதுவாக இருக்கும்.

எலுமிச்சை சாறை தயிருடன் சேர்த்துக் கலந்து, தலைக்கு மசாஜ் செய்து குளித்தால் தலைமுடி நன்றாக வளருவதுடன் பொடுகு பிரச்சனைகள் இல்லாமல் இருக்கும்.

வாரத்தில் ஒரு முறையாவது வேப்ப எண்ணெய்யை தலைக்கு தடவி நன்றாக மசாஜ் செய்து குளித்தால், தலைமுடி நீளமாக வளரும். மேலும் பொடுகு மற்றும் பேன் தொல்லைகள் இல்லாமலும் இருக்கும்.

வாரத்தில் ஒருமுறையாவது முட்டையின் வெள்ளைக் கருவை தலைக்கு அப்ளை செய்து நன்றாக ஊற வைத்து குளிக்க வேண்டியது அவசியமாகும். இதன் மூலம் கூந்தலில் பிரச்சனைகள் இல்லாமல் இருக்கும்.