fbpx
Take a fresh look at your lifestyle.

தந்தையின் பாதையில் பயணிக்கும் தனயன் பெற்றுக்கொண்ட முதல் வெற்றி

தமிழகத்தை சோகத்தில் ஆழ்த்தியது மட்டுமல்லாமல் உலகெங்கும் வாழ்கின்ற தமிழ் மக்களின் நெஞ்சங்களை நெகிழ வைத்து எல்லோரிடமிருந்தும் பிரியாவிடை பெற்றுச் சென்றுவிட்டார் தி.மு.க.முன்னாள் தலைவர் திரு.மு.கருணாநிதி. தி.மு.க.தலைவர் மு.க.ஸ்டாலின் அவர் வழியில் பயணிக்கத் தொடங்கிவிட்டார். மறைந்த கலைஞர் அவர்கள் தொடர்பாக சிலர் கட்சி சார்பாக, அவர் நடந்துகொண்ட விதம் தொடர்பாக பிழை கூறுவதுண்டு. அந்த வகையில் தி.மு.க வின் தலைமைப் பதவியை தொடர்ந்து தம்வசம் வைத்திருந்தமை தொடர்பாகவும் கருணாநிதியை விமர்சிப்பவர்களும் உண்டு. ஏனெனில் மகன் ஸ்டாலினுக்கு தான் உயிருடன் இருக்கும் போதே தனது அரசியல் தலைமைத்துவத்தை விட்டுக்கொடுத்து அவரை ஒரு சிறந்த தலைவராக கருணாநிதி மேலும் வளர்த்திருக்க வேண்டும். அதை விடுத்து கட்சித் தலைமையை தான் வைத்திருந்ததோடு மட்டுமல்லாது தனது இயலாமை நேரத்திலும் கூட எந்தவொரு முடிவினையும் தன்னிடம் கேட்டே ஸ்டாலின் முடிவெடுக்க வேண்டிய நிலைமையை அவர் உருவாக்கி வைத்திருந்தார் என விமர்சிப்போர் குறிப்பிடுகின்றனர்.

LIKE & FOLLOW US ON FACEBOOK

!!இந்தப் பதிவு உங்களுக்குப் பிடித்தால், கீழே உள்ள Facebook Button இல் க்ளிக் செய்து உங்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்!!

ஆனால் கலைஞரின் மறைவின் பின் முதல்முறையாக திரு.மு.க.ஸ்டாலின் தனித்து முடிவெடுக்க வேண்டிய சூழலில் அவர் எடுத்துக்கொண்ட முடிவானது அவருக்கு வெற்றியைப் பெற்றுக்கொடுத்துள்ளது. ஆம், தந்தையின் இறுதி விருப்பப்படி மெரினாவில் அண்ணா சமாதியருகே அவரை அடக்கம்செய்ய தமிழக அரசு மறுத்திருந்த நிலையில் கட்சியின் மூத்த தலைவர்கள் குடும்ப உறுப்பினர்கள் ஆகியோருடன் கலந்தாலோசித்து அதனை சிறப்பான முறையில் எதிர்கொண்டு உயர் நீதிமன்றத்தினூடாக தந்தையின் விருப்பத்தை நிறைவேற்றி வெற்றியடைந்துள்ளார். அவரது முயற்சி வெற்றியில் தொண்டர்கள் மகிழ, குடும்ப உறுப்பினர்கள் சந்தோசப்பட அண்ணா சமாதியின் அருகே கலைஞர் நிம்மதியாக துயில்கொள்கின்றார்.

கலைஞரின் வழிகாட்டலில் வளர்ந்த அவருடைய வாரிசு பெற்றுக்கொண்ட முதல் வெற்றியாக அரசியல் அவதானிகள் இதனைக் கருதுகின்றனர். கலைஞர் இறந்த துக்க நிலையில் கூட திராவிட முன்னேற்றக் கழகத்தினர் இவ் வெற்றியை எண்ணிப் பெருமைப்பட்டதுடன் திரு.மு.க.ஸ்டாலினை வாழ்த்தி எதிர்கால அரசியல் வெற்றிக்கான முதல் படியாக இது அமைவதாக குறிப்பிடுகின்றனர்.

 

மிகத் துல்லியமான ஒலித் தெளிவில் தமிழில் ஓர் ரேடியோ… கேட்டு மகிழ இங்கே க்ளிக் செய்யுங்கள்

அன்பிற்கினிய நேயர்களே… எமது செய்திச் சேவை பிடித்தால், மேலும் செய்திகளை அறிந்து கொள்ள Puradsifm எனும் எமது பேஸ்புக் பக்கத்தினை மறக்காது லைக் செய்யுங்கள், செய்தி பற்றிய உங்கள் எண்ணக் கருத்துக்கள், குறை நிறைகளைப் பகிர்ந்திட இங்கே க்ளிக் செய்யுங்கள்