fbpx
Take a fresh look at your lifestyle.

முகப்புத்தக தகவல் திருட்டு – கேம்பிரிட்ஜ் அனலிற்றிக்கா வுக்கு எதிராக வழக்கு

இந்தியாவின் முகப்புத்தக பயனர்களின் கணக்கிலிருந்து தகவல்கள் திருடப்பட்டது தொடர்பான வழக்கில் கேம்பிரிட்ஜ் அனலிற்றிக்கா மற்றும் குளோபல் சயன்ஸ் ரிசேர்ச் நிறுவனங்களுக்கு எதிராக இந்திய சிபிஐ விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

LIKE & FOLLOW US ON FACEBOOK

சில மாதங்களுக்கு முன் வெளியான தகவல்களின்படி சுமார் 8.1 கோடி இந்தியர்களின் பேஸ்புக் தகவல்கள் திருடப்பட்டு  குளோபல் சயன்ஸ் ரிசேர்ச் நிறுவனத்தினரால் கேம்பிரிட்ஜ் அனலிற்றிக்கா விற்கு விற்கப்பட்டமை தொடர்பான செய்திகள் வெளியாகியிருந்தன. இதனை பேஸ்புக் நிறுவனமும் ஒப்புக்கொண்டிருந்தது.

!!இந்தப் பதிவு உங்களுக்குப் பிடித்தால், கீழே உள்ள Facebook Button இல் க்ளிக் செய்து உங்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்!!

இந்நிலையில் இதற்கான விளக்கத்தை வழங்குமாறு இரண்டு நிறுவனங்களிடமும் இந்திய மத்திய அரசு கட்டளை அனுப்பியது. திருட்டு உறுதியாகும் பட்சத்தில் தகவல் தொழிநுட்பச் சட்டம் மற்றும் இந்திய தண்டனையியல் சட்டம் ஆகியவற்றின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படுமென மத்திய தகவல் தொழிநுட்பத்துறை அமைச்சர் குறிப்பிட்டிருந்த நிலையில், தற்போது இந் நிறுவனங்களுக்கு எதிராக சிபிஐ முதற்கட்ட விசாரணைகளைத் தொடங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மிகத் துல்லியமான ஒலித் தெளிவில் தமிழில் ஓர் ரேடியோ… கேட்டு மகிழ இங்கே க்ளிக் செய்யுங்கள்

அன்பிற்கினிய நேயர்களே… எமது செய்திச் சேவை பிடித்தால், மேலும் செய்திகளை அறிந்து கொள்ள Puradsifm எனும் எமது பேஸ்புக் பக்கத்தினை மறக்காது லைக் செய்யுங்கள், செய்தி பற்றிய உங்கள் எண்ணக் கருத்துக்கள், குறை நிறைகளைப் பகிர்ந்திட இங்கே க்ளிக் செய்யுங்கள்