fbpx
Take a fresh look at your lifestyle.

கேரளாவில் வெள்ளப்பெருக்கு – 24 பேர் பலி

இந்தியா கேரளாவில் பெய்துவருகின்ற கடும் மழைகாரணமாக வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. கரைபுரண்டு பாய்கின்ற வெள்ளத்தின் காரணமாக பல நீர்த் தேக்கங்களின் அணைக் கதவுகள் திறந்துவிடப்பட்டுள்ளதால் இந் நிலை ஏற்பட்டுள்ளது. மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் இதுவரை 24 பேர் உயிரிழந்துள்ளதாக கேரள செய்திகள் தெரிவிக்கின்றன. நிலைமையை எதிர்கொள்ளவதற்காக சென்னையிலிருந்து தேசிய பேரிடர் மேலான்மைக்குழு கேரளாவிற்கு நகர்ந்துள்ளது.

LIKE & FOLLOW US ON FACEBOOK

கேரளாவில் கடந்த ஒரு மாதமாக கடும் மழை ஏற்பட்டிருந்த போதிலும் கடந்த வாரம் மழை ஓய்ந்தது. இருந்தபோதிலும் நேற்று  முன்தினம் இடியுடன் கூடிய கடும் மழைப்பொழிவு ஏற்பட்டது. இதன் காரணமாக இடுக்கி அணையின் நீர்மட்டம் சடுதியாக உயர்ந்தது. இதனால் 26 வருடங்களின் பின் இடுக்கி அணை திறந்துவிடப்பட்டது.

 

!!இந்தப் பதிவு உங்களுக்குப் பிடித்தால், கீழே உள்ள Facebook Button இல் க்ளிக் செய்து உங்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்!!

இடுக்கி மாவட்டம் அடிமாலியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 5 பேர் உயிரிழந்தனர். கேரள மாநிலத்தின் மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு, இடுக்கி , கண்ணூர், பாலக்காடு, கொல்லம் மாவட்டங்களில் கடும் மழையில் ஏற்பட்ட வெள்ளத்திலும் மண்சரிவிலும் சிக்கி 24 பேர் பலியானதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

நிலச்சரிவின் காரணமாக போக்குவரத்துக்களும் பாதிக்கப்பட்டிருந்தன. மழை இன்றும் பெய்துவருவதால் நேற்று மூடப்பட்டிருந்த பள்ளிகள், கல்லூரிகளுக்கு இன்றும் விடுமுறை வழங்கப்படுமென எதிர்பார்க்கப்படுகின்றது. கொச்சி விமா நிலையத்தினுள் வெள்ளம் புகுந்ததால் விமா சேவைகள் இரத்துச் செய்யப்பட்டுள்ளன. மக்களுக்கான மீட்புப் பணிகளும், பாதுகாப்பு ஏற்பாடுகளும் இட்பெற்றுக்கொண்டிருப்பதாக மாநில முதல்வர் தெரிவித்துள்ளார்.

மிகத் துல்லியமான ஒலித் தெளிவில் தமிழில் ஓர் ரேடியோ… கேட்டு மகிழ இங்கே க்ளிக் செய்யுங்கள்

அன்பிற்கினிய நேயர்களே… எமது செய்திச் சேவை பிடித்தால், மேலும் செய்திகளை அறிந்து கொள்ள Puradsifm எனும் எமது பேஸ்புக் பக்கத்தினை மறக்காது லைக் செய்யுங்கள், செய்தி பற்றிய உங்கள் எண்ணக் கருத்துக்கள், குறை நிறைகளைப் பகிர்ந்திட இங்கே க்ளிக் செய்யுங்கள்