fbpx
Take a fresh look at your lifestyle.

குறித்த காலப்பகுதியில் மாகாணசபைத் தேர்தல் – பிரதமர் தெரிவிப்பு

இலங்கையில் மாகாணசபைத் தேர்தல்கள் எந்த தேர்தல்முறையில் நடத்தப்படவேண்டும் எனும் விவாதம் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. எனவே எம்முறையில் தேர்தல் நடாத்துவது எனும் முடிவு எடுக்கப்பட்டதும் குறித்த வேளையில் மாகாணசபைத் தேர்தல்கள் நடத்தப்படும் என இலங்கைப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

LIKE & FOLLOW US ON FACEBOOK

நேற்றையதினம் சுயாதீன ஆணைக்குழுக்களின் தலைவர்கள், உறுப்பினர்களுக்கான சம்பளத்தை அதிகரிப்பது தொடர்பான பிரேரணையினை முன்வைத்து உரையாற்றும் போதே சபையில் பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டார்.

!!இந்தப் பதிவு உங்களுக்குப் பிடித்தால், கீழே உள்ள Facebook Button இல் க்ளிக் செய்து உங்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்!!

‘அரசாங்கத்துக்கு சாதகமான சூழல் இல்லாத சமயத்தில் கூட நாம் உள்ளூராட்சித் தேர்தல்களை நடத்தியிருக்கின்றோம். எனவே நாம் எந்த ஒரு சூழ்நிலையிலும் மாகாணசபைத் தேர்தல்களைப் பிற்போடப் போவதில்லை’. என்று குறிப்பிட்ட பிரதமர் இதைக் கண்டு எதிர்க் கட்சிகள் அச்சப்படத் தேவையில்லை எனவும் கூறினார்.

நாட்டில் ஜனநாயகம் உறுதியடைந்ததற்கு சுயாதீன ஆணைக்குழுக்களின் சேவை இன்றியமையாததாக இருந்தது. நல்லாட்சி அரசாங்கமே இதற்கு காரணமாகும். இவ்வாணைக்குழுக்களின் ஊடாக அரசாங்க சேவையாளர்களின் உரிமைகளும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதுடன் இச் சுயாதீன ஆணைக்குழுக்கள் தொடர்பாக எமக்கு சர்வதேசத்தின் பாராட்டுக்களும் கிடைத்துள்ளன.  என்று மேலும் தனது உரையில் பிரதமர் குறிப்பிட்டார்.

மிகத் துல்லியமான ஒலித் தெளிவில் தமிழில் ஓர் ரேடியோ… கேட்டு மகிழ இங்கே க்ளிக் செய்யுங்கள்

அன்பிற்கினிய நேயர்களே… எமது செய்திச் சேவை பிடித்தால், மேலும் செய்திகளை அறிந்து கொள்ள Puradsifm எனும் எமது பேஸ்புக் பக்கத்தினை மறக்காது லைக் செய்யுங்கள், செய்தி பற்றிய உங்கள் எண்ணக் கருத்துக்கள், குறை நிறைகளைப் பகிர்ந்திட இங்கே க்ளிக் செய்யுங்கள்