fbpx
Take a fresh look at your lifestyle.

இலங்கையில் ரயில் சேவைக்குப் பதில் இராணுவ பஸ்கள் சேவையில்

இலங்கையில் புகையிரத சேவை ஊழியர்கள் மேற்கொண்டுவரும் தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்தைச் சமாளிப்பதற்காக இராணுவ பஸ்களை சேவையில் ஈடுபடுத்தியுள்ளது ஆளும் நல்லாட்சி அரசாங்கம்.  நேற்றைய தினம் இச் சேவைகள் இடம்பெற்றன. நடைபெற்றுக்கொண்டிருக்கும் க.பொ.த உயர்தரப் பரீட்சை எழுதும் மாணவர்களின் நன்மை கருதியே இச் சேவை இடம்பெறுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LIKE & FOLLOW US ON FACEBOOK

இந்த வாரத்தில் ரயில்வே ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட அமைச்சரவைப் பத்திரத்திற்கு அமைச்சரவையில் அனுமதி  வழங்கப்படாததைத் தொடர்ந்து நேற்று முன்தினம்( 08.08) மாலையிலிருந்து புகையிரத சேவை ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

!!இந்தப் பதிவு உங்களுக்குப் பிடித்தால், கீழே உள்ள Facebook Button இல் க்ளிக் செய்து உங்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்!!

இதனால் பணிகளின் நிமித்தம் கொழும்பு வந்திருந்தவர்கள் மீண்டும் வீடுகளுக்குச் செல்ல முடியாமல் கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து கோட்டை புகையிரத நிலையம் இராணுவத்தினரின் கட்டுப்பாட்டின் கீழ்க் கொண்டுவரப்பட்டது. பயணிகளின் நலனில் அக்கறைகொண்டு இராணுவத்தின் பாதுகாப்புடன் தூர இடங்களுக்கான சேவைகள் இலங்கை போக்குவரத்து சபையால் முன்னெடுக்கப்பட்டன.

பணிப் புறக்கணிப்பு தொடர்ந்தும் இடம்பெறுவதால் இராணுவ பஸ் வண்டிகளும் சேவையில் ஈடுபடுத்தப்பட்டதுடன் ஓய்விலுள்ள ரயில் சாரதிகளையும் சேவைக்கு வருமாறு அரசு கேட்டுக்கொண்டதோடு வழிப் பயண அனுமதிப் பத்திரம் இல்லாமலும் வண்டிகள் சேவையில் ஈடுபடலாமென அரசாங்கம் அறிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

மிகத் துல்லியமான ஒலித் தெளிவில் தமிழில் ஓர் ரேடியோ… கேட்டு மகிழ இங்கே க்ளிக் செய்யுங்கள்

அன்பிற்கினிய நேயர்களே… எமது செய்திச் சேவை பிடித்தால், மேலும் செய்திகளை அறிந்து கொள்ள Puradsifm எனும் எமது பேஸ்புக் பக்கத்தினை மறக்காது லைக் செய்யுங்கள், செய்தி பற்றிய உங்கள் எண்ணக் கருத்துக்கள், குறை நிறைகளைப் பகிர்ந்திட இங்கே க்ளிக் செய்யுங்கள்