fbpx
Take a fresh look at your lifestyle.

விஜயகலா மீதான வழக்கு ஒக்டோபருக்கு ஒத்திவைப்பு

கடந்த மாதம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற அரச நிகழ்வு ஒன்றின்போது ஐக்கிய தேசியக் கட்சியின் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும்  சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சருமான திருமதி.விஜயகலா மகேஸ்வரன் ஆற்றிய உரையின் காரணமாக அவர் தனது பதவியை இழக்கவேண்டிய நிலை ஏற்பட்டதோடு வழக்கு விசாரணைக்கும் முகம்கொடுக்க வேண்டியேற்பட்டது.

LIKE & FOLLOW US ON FACEBOOK

!!இந்தப் பதிவு உங்களுக்குப் பிடித்தால், கீழே உள்ள Facebook Button இல் க்ளிக் செய்து உங்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்!!

‘வடக்கு கிழக்கில் மக்கள் அச்சமின்றி வாழவேண்டுமாயின் விடுதலைப் புலிகள் அமைப்பை மீண்டும் ஏற்படுத்த வேண்டுமென அவர் தெரிவித்ததாக அவர் மீது வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கில் திட்டமிட்ட குற்றவிசாரணைப் பிரிவுப் பொலிசார் சம்பவம் தொடர்பில் 6 அமைச்சர்கள் 14 அரச உத்தியோகத்தர்கள் 30 ஊடகவியலாளர்கள் ஆகியோரிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டதாக நீதிமன்றில் தெரிவித்தனர்.

சட்டமா அதிபரின் ஆலோசனை கிடைக்கும் வரை வழக்கை மீள அழைப்பதற்கான திகதியை வழங்குமாறு பொலிசார் கோரியதற்கு இணங்க வழக்கை ஒக்டோபர் மாதம் 19 ஆம் திகதி விசாரிப்பதற்கு நீதிபதி இணக்கம் தெரிவித்தார்.

மிகத் துல்லியமான ஒலித் தெளிவில் தமிழில் ஓர் ரேடியோ… கேட்டு மகிழ இங்கே க்ளிக் செய்யுங்கள்

அன்பிற்கினிய நேயர்களே… எமது செய்திச் சேவை பிடித்தால், மேலும் செய்திகளை அறிந்து கொள்ள Puradsifm எனும் எமது பேஸ்புக் பக்கத்தினை மறக்காது லைக் செய்யுங்கள், செய்தி பற்றிய உங்கள் எண்ணக் கருத்துக்கள், குறை நிறைகளைப் பகிர்ந்திட இங்கே க்ளிக் செய்யுங்கள்