அமெரிக்கா வருந்துமளவுக்குச் செய்யப்படும்; ஈரான் எச்சரிக்கை!

“எங்களுக்கு அமெரிக்காவுடன் போர் செய்ய விருப்பமில்லை. ஆனால், அவர்கள் ஏன் எம் மீது கை வைத்தோம் என வருந்துமளவுக்கு நாங்கள் செய்வோம் ” என ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது.

எமது பதிவுகள் பிடித்தால், Please நமது பேஸ்புக் பக்கத்தினை லைக் செய்யுங்கள்!!

அமெரிக்க வான்படைத் தாக்குதலில் ஈரான் இராணுவத் தளபதி குவாசிம் சுலைமானி ஈராக்கில் வைத்துக் கொல்லப்பட்டார்.

இதற்குப் பழி தீர்க்கப்படும் என ஈரான் எச்சரித்த நிலையில், அமெரிக்க அதிபர், 52 இடங்களைத் தாக்க குறிவைத்துள்ளோம் எனத் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் அமெரிக்க அதிபரின் மிரட்டலை எதிர்கொள்ளத் தாங்கள் தயாராக இருக்கிறார்கள் என ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் அப்பாஸ் மவுசாவி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியவை வருமாறு-

“எங்களுக்கு அமெரிக்காவுடன் போர் செய்ய விருப்பமில்லை. ஆனால் எந்தவொரு சூழ்நிலையையும் எதிர்கொள்ளத் தயாராக உள்ளோம். தளபதி கொல்லப்பட்டதற்கு பழி வாங்கியே தீருவோம். அமெரிக்க அதிகாரிகள் ஏன் தாக்குதல் நடத்தினோம் என்று வருந்தும் அளவுக்கு எமது முடிவு இருக்கும் ” என்றார்.