எப்போது கலையும் நாடாளுமன்றம்? அமைச்சர் சொன்ன தகவல்!

மார்ச் மாதம் இரண்டாம் திகதி நள்ளிரவில் நாடாளுமன்றம் கலையும் வாய்ப்புள்ளது.

எமது பதிவுகள் பிடித்தால், Please நமது பேஸ்புக் பக்கத்தினை லைக் செய்யுங்கள்!!

நடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தலில் கோட்டாபய ராஜபக்ச வெற்றிபெற்றுள்ள நிலையில், நாடாளுமன்றத்தை எப்போது கலைப்பார் என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

இந்நிலையில், “நாடாளுமன்றத்தைக் கலைப்பதற்கான சட்டரீதியான அதிகாரம், எதிர்வரும் மார்ச் மாதம் இரண்டாம் திகதி நள்ளிரவு 12 மணிக்கே கிடைக்கும்” என கல்வி அமைச்சர் டலஸ் அழகப் பெரும தெரிவித்துள்ளார்.

மாத்தறையில் நிகழ்வொன்றில் உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு-

“நாடாளுமன்றத்தைக் கலைக்கும் சட்டரீதியான அதிகாரம் எதிர்வரும் 55 நாட்களுக்குள் ஜனாதிபதிக்குக் கிடைக்கும். அதாவது,
மார்ச் மாதம் இரண்டாம் திகதி நள்ளிரவு 12 மணிக்கே அந்த அதிகாரம் கிடைக்கும்.

எனவே, அன்றைதினம் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டால், அன்றிலிருந்து 110 நாட்களின் பின்னர் நாடாளுமன்றத் தேர்தலை நடத்துவதற்கான சந்தர்ப்பம் கிடைக்கும். “என்றார்.