சுற்றுலா மேற்கிந்திய தீவுகள் அணி மற்றும் ஸ்ரீ லங்கா கிரிக்கெட் தலைவர் அணிக்கு இடையிலான பயிற்சி போட்டி இன்று..!!
இன்றைய தினம் பீ.சரா ஓவல் மைானத்தில் சுற்றுலா மேற்கிந்திய தீவுகள் அணி மற்றும் ஸ்ரீ லங்கா கிரிக்கெட் தலைவர் அணிக்கு இடையிலான பயிற்சி போட்டி ஒன்று நடைபெறுகிறது. ஸ்ரீ லங்கா கிரிக்கெட் தலைவர் அணியின் தலைவராக உபுல் தரங்க நியமிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் 20 ஆம் திகதி நடைபெறவுள்ள இரண்டாவது பயிற்சி போட்டிக்கு லஹிரு திரிமான்ன தலைமை ஏற்கவுள்ளார். எதிர்வரும் 22ஆம் திகதி சுற்றுலா மேற்கிந்திய தீவுகள் அணி மற்றும் ஸ்ரீ லங்கா கிரிக்கெட் தலைவர் அணிக்கு இடையிலான முதலாவது ஒருநாள் தொடர் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.