யுத்தத்தில் கணவனை இழந்த பெண்கள் வீட்டை விட்டு துரத்தப்படும் அவலம்

குடும்பத்தில் கணவன் திடீரென இறந்த பின் பிள்ளைகளோடு விதவைப் பெண்கள் வீடடை விட்டு துரத்தப்படுகின்ற துயர நிகழ்வுகளும் இந்த பூமியில் இன்னும் நடந்துகொண்டுதான் இருக்கின்றது. மத்திய ஆபிரிக்க குடியரசிலுள்ள பெண்களுக்கே இவ்வாறான கொடுமைகள் நிகழ்த்தப்படுகின்றன.


மத்திய ஆபிரிக்க குடியரசுப் போராட்டத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கொல்லப்படட நிலையில் அவ்வாறு கொல்லப்பட்ட ஆண்களின் குடும்பங்கள் காவனிப்பாரற்ற நிலையில் இருப்பதோடு அவர்களின் மனைவிகள் அவர்களின் உறவினர்களாலேயே வீடடை விட்டு துரத்தப்படுகின்றனர்.

இறந்த கணவருக்கு நிலங்கள் உடைமைகள் என்று சொத்துக்கள் இருந்தபோதிலும் அந்த ஆணின் சொத்துக்களில் எந்த உரிமையும் பெற்றுக்கொள்ள முடியாமல் வீட்டை விட்டே பெண்கள் வெளியேற்றப்பட்டு அன்றாட உணவிற்கே அல்லல்படும் நிலையே அங்கு நிலவுகின்றது.

யுத்தத்தின்போது போராட்டங்களின்போதோ உயிர்த்தியாகம் செய்யும் ஆண்களின் குடும்பங்களே இந்தப் பெண்களை துயரத்தில் தள்ளுகின்றமைதான் வருந்தத் தக்கது.
சார்லோட்டே ம்பேடிலிஸ்ஸியோ வினுடைய கணவர் டேனியல் கசஒரோ 2014 ஆம் ஆண்டு கொல்லப்பட்ட பின் 3 பிள்ளைகளுடன் வீட்டை விட்டு வெளியே துரத்தப்பட்டுள்ளார். இன்றுவரை பிள்ளைகளை வளர்க்கப் பாடுபட்டு வருவதுடன் இவ்வாறான பெண்கள் பெரும் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர் எனவும் அவர் கருத்துத் தெரிவித்துள்ளார்.

அனைத்துச் செய்திகளையும் ஒரே க்ளிக்கில் படிக்க, இங்கே க்ளிக் செய்யுங்கள்!!
error: Alert: Content is protected !!