fbpx

மனித உருவில் மிருகங்கள்…! காப்பாற்றுங்கள் என் கதறும் உயிர்களை கண்டுகொள்ளாத இவர்களை என்ன செய்யலாம்…!

இந்த மனிதர்கள் எப்படி பட்டவர்கள் என்றால் மிருகங்கள் கூட உமிழ் நீரை சேமித்து செல்லும் காரணம் இப்படியானவர்களுக்கா என் உமிழ் நீர் வீணாக கூடாது என்று . செல்பி வந்ததால் தங்கள் மனதின் ஈரத்தை கூட இழந்து போய் மிருகமான இளைஞர்கள் இருக்கிறார்கள் . ராஜஸ்தானில் வீதி விபத்தொன்று நடந்துள்ளது .

இதில் வாகனத்தில் பயணம் செய்தவர்கள்கள் இரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடி கதறிக் கொண்டிருக்க அங்கு கூடிய கூட்டம் செல்பி மற்றும் வீடியோ எடுத்த படி இருந்துள்ளது . காப்பாற்றுங்கள் காப்பாற்றுங்கள் என காதறும் குரல்களை கண்டுகொள்ளவில்லை. தகவல் அறிந்து விபத்து நடந்த இடத்திற்கு பொலீஸார் வரும் வரை எவரும் உயிருக்கு போராடியவர்களை காப்பாற்ற முன்வரவில்லை. பின் திட்டி தீர்த்த பொலீஸார் உயிருக்கு போராடியவர்களை வைத்தியசாலைக்கு எடுத்து செல்லும் வழியில் இருவரும் இறந்தனர்.

சுமார் 1 மணி நேரம் இரத்தம் சென்றுள்ளதால் தான் இவர்களை காப்பாற்ற முடியாமல் போய் உள்ளது. விபத்து நேர்ந்த நேரத்தில் இவர்களை காப்பாற்ற எவரும் முன் வரவில்லை என பொலீஸார் கவலை தெரிவித்துள்ளனர். அத்துடன் மரணித்தவர்கள் பற்றி விசாரணை நடத்தியதில் குஜராத்தில் உள்ள சிமென்ட் தொழிற்சாலை பணி முடித்துவிட்டு ராஜஸ்தான் செல்லும் வழியில் தான் விபத்து நேர்ந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்..!

என்ன மனிதர்கள் மத்தியில் வாழ்ந்துகொண்டிருக்கின்றோம் நாம்..! ?
அன்பிற்கினிய நேயர்களே, எமது செய்திச் சேவை மற்றும் வானொலி பிடித்திருந்தால், மறக்காது Puradsifm எனும் எமது பேஸ்புக் பக்கத்தை லைக் செய்ய மறக்க வேண்டாம்!! நன்றி!!

இந்தப் பதிவு உங்களுக்குப் பிடித்தால், கீழே உள்ள Facebook Button இல் க்ளிக் செய்து உங்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்!!

இன்றைய அனைத்துச் செய்திகளையும் படிக்க , இங்கே க்ளிக் செய்யவும்
error: Alert: Content is protected !!