சினிமா உலகம் தினம் ஒருவரின் மரணத்தை சந்தித்து வருகின்றது என கூறமுடியும் ,இந்த நிலையில் 70 திரைப்படங்களுக்கு மேல் ஹீரோயினாகவும் 90 படங்களுக்கு மேலாக துணை நடிகையாகவும் நடித்துள்ளவர் பிரபல நடிகை ரிதா பாதுரி ,
இவர் கமலஹாசனின் முதல மலையாள திரைப்பட ஜோடி, ஆம் கமலஹாசன் நடித்த முதல் மலையாள திரைப்படமான “கன்னியாகுமாரி”யில் ரிதா பாதுரி கமலஹாசனின் ஜோடி, திரையுலகில் பலரின் பாராட்டையும் அன்பையும் பெற்ற நடிகை ரிதா தனது 62வது வயதில் நேற்று மரணமடைந்தார் ,
சின்னத்திரை,பெரியத்திரை என கலக்கி வந்த நடிகையின் மரணம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது, திரையுலகத்தை சார்ந்த அனைவரும் தங்கள் இரங்கலை தெரிவித்து வருகின்றனர் ..!
புத்தம் புதிய பாடல்கள், என்றும் இனிக்கும் இசைஞானியின் இனிய கீதங்கள், மனதை மயக்கும் மெலடிப் பாடல்கள், மிகத் துல்லியமான ஒலித் தெளிவில் கேட்டு மகிழ இங்கே உள்ள Live Radio Button இல் க்ளிக் செய்யுங்கள்