தவறிச் சுட்ட சிறுவன்! பலியானது 2 வயதுக் குழந்தை

4 வயதுச் சிறுவன் ஒருவன் துப்பாக்கியை வைத்து விளையாடிக் கொண்டிருந்தபோது தவறுதலாகச் சுட்டத்தில் 2 வயதுக் குழந்தையொன்று பலியாகியுள்ளது.  இந்த கோரச் சம்பவமானது அமெரிக்காவில் இடம்பெற்றுள்ளது.

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் சான் பெர்னார்டினோ என்ற இடத்தில் நேற்று முன்தினம் நடந்த சம்பவம் பதற வைப்பதாக அமைந்து உள்ளது. அங்கு உள்ள ஒரு வீட்டில் 4 வயது சிறுவன் ஒருவனிடம் கைத்துப்பாக்கி கிடைத்தது. அதை வைத்து அவன் விளையாடிக்கொண்டு இருந்தபோது தவறுதலாக விசையை அழுத்தி சுட்டு விட்டான். அதில் குண்டு பாய்ந்து 2 வயதே ஆன ஒரு பெண் குழந்தை ரத்த வெள்ளத்தில் சரிந்தது. அந்தக் குழந்தை, அவனது நெருங்கிய உறவுக்குழந்தை.

குண்டுபாய்ந்த குழந்தையை வைத்தியசாலைக்கு எடுத்தச் சென்றபோதும் சிகிச்சை பலனளிக்காது அநடதக் குழந்தை இறந்துள்ளது.

அனைத்துச் செய்திகளையும் ஒரே க்ளிக்கில் படிக்க, இங்கே க்ளிக் செய்யுங்கள்!!
error: Alert: Content is protected !!