திருப்பதியில் தரிசனத்திற்கு கட்டுப்பாடு – கும்பாபிஷேகம் நடைபெறுகின்றது.

இந்தியாவின் பணக்காரக் கடவுளான திருப்பதி ஶ்ரீ வெங்கடாஜலபதி பெருமாள் கோவிலில் தரிசனத்திற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. வி.ஐ.பி தரிசனம், சர்வ தரிசனம், திவ்ய தரிசனம் உட்பட அனைத்து தரிசனங்களும் தற்காலிகமாக இடைநிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சாதாரண வழியான தரிசனம் மட்டுமே இடம்பெறுமென கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க தினசரி பல்லாயிரம் பக்தர்கள் வந்து செல்கின்றனர். இம்மாதம் 12 ம் திகதி தொடக்கம் 16 ம் திகதி வரை கும்பாபிஷேகம் நடைபெறுகின்றது. 12 வருடங்களின் பின்னர் இது இடம்பெறுவதால் பல்லாயிரம் பக்தர்கள் கூடுவர் என எதிர்பார்க்கப்படுவதால் நேற்றைய தினம் மாலையிலிருந்து சுவாமி தரிசனம் இடைநிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்த போதிலும் பக்தர்களின் எதிர்ப்பால் அது திரும்பப் பெறப்பட்டிருந்தது.

ஒக்டோபர் 3 ஆம் திகதி வரை சிறப்பு மண்டலாபிஷேகம் நடைபெற உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

மிகத் துல்லியமான ஒலித் தெளிவில் தமிழில் ஓர் ரேடியோ… கேட்டு மகிழ இங்கே க்ளிக் செய்யுங்கள்

அன்பிற்கினிய நேயர்களே… எமது செய்திச் சேவை பிடித்தால், மேலும் செய்திகளை அறிந்து கொள்ள Puradsifm எனும் எமது பேஸ்புக் பக்கத்தினை மறக்காது லைக் செய்யுங்கள், செய்தி பற்றிய உங்கள் எண்ணக் கருத்துக்கள், குறை நிறைகளைப் பகிர்ந்திட இங்கே க்ளிக் செய்யுங்கள்

அனைத்துச் செய்திகளையும் ஒரே க்ளிக்கில் படிக்க, இங்கே க்ளிக் செய்யுங்கள்!!
error: Alert: Content is protected !!