யாழ் கோவளம் கடலில் மூழ்கி மாணவன் மரணம்.

யாழ்ப்பாணம் காரைநகர் கோவளம் கடற்பகுதிக்கு இன்றுமாலை குளிக்கச் சென்ற மூன்று பாடசாலை மாணவர்களில் ஒருவர் கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளார். சம்பவத்தில் உயிரிழந்தவர் யாழ்ப்பாணம் யாழ்ரன் கல்லூரியில் பத்தாம் தரத்தில் கல்வி பயிலும் காரைநகர் சிவகாமி அம்மன் கோவிலடியைச் சேர்ந்த பரலோகநாதன் டனுசியன் என்ற மாணவனாவார்.

தற்போது பாடசாலை விடுமுறைக் காலம் ஆகையால் மாணவர்கள் மூவர் சேர்ந்து காரைநகர் கோவளம் கடற்கரைக்கு குளிக்கச் சென்றதாகவும் கடலில் நீச்சலடித்துக்கொண்டிருந்த வேளையில் ஒருவர் கடல் அலைகளில் அடிபட்டு கடலில் மூழ்கியதாகவும் சக மாணவர்கள் தெரிவித்தனர். பொலிசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

மிகத் துல்லியமான ஒலித் தெளிவில் தமிழில் ஓர் ரேடியோ… கேட்டு மகிழ இங்கே க்ளிக் செய்யுங்கள்

அன்பிற்கினிய நேயர்களே… எமது செய்திச் சேவை பிடித்தால், மேலும் செய்திகளை அறிந்து கொள்ள Puradsifm எனும் எமது பேஸ்புக் பக்கத்தினை மறக்காது லைக் செய்யுங்கள், செய்தி பற்றிய உங்கள் எண்ணக் கருத்துக்கள், குறை நிறைகளைப் பகிர்ந்திட இங்கே க்ளிக் செய்யுங்கள்

அனைத்துச் செய்திகளையும் ஒரே க்ளிக்கில் படிக்க, இங்கே க்ளிக் செய்யுங்கள்!!
error: Alert: Content is protected !!