fbpx

திருமலையிலும் கேரள கஞ்சா பிடிபட்டது – யாழ்ப்பாணத்திலிருந்து கொண்டு சென்றனர்.

திருகோணமலையில் நேற்றிரவு யாழ்ப்பாணத்திலிருந்து சென்ற மூவரிடம் மேற்கொள்ளப்பட்ட சோதனையின்போது 3.5 கிலோகிராம் நிறையுள்ள கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

நேற்றிரவு யாழிலிருந்து சென்ற இரண்டு பெண்கள் மற்றும் ஒரு ஆண் ஆகியோரை பொலிசார் சோதனையிட்டபோது மேற்படி கஞ்சா கைப்பற்றப்பட்டதாகவும் எனினும் அதற்கும் தங்களுக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை என அவர்கள் மறுத்ததாகவும் பொலிசார் தெரிவித்தனர்.

யாழில் இருவர் அப் பொதியினை தம்மிடம் கொடுத்து விட்டதாகவும் திருகோணமலை அனுராதபுரம் சந்தியில் ஒருவர் வந்து அப்பொருளை வாங்கிச் செல்வார் என தெரிவித்ததாகவும் அவர்கள் கூறியதாக தெரியவருகின்றது. எனினும் கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்கள் பொலிசாரால் நீதிமன்றில் முன்னிறுத்தப்படுவர் என தெரிவிக்கப்படுகின்றது.

மிகத் துல்லியமான ஒலித் தெளிவில் தமிழில் ஓர் ரேடியோ… கேட்டு மகிழ இங்கே க்ளிக் செய்யுங்கள்

அன்பிற்கினிய நேயர்களே… எமது செய்திச் சேவை பிடித்தால், மேலும் செய்திகளை அறிந்து கொள்ள Puradsifm எனும் எமது பேஸ்புக் பக்கத்தினை மறக்காது லைக் செய்யுங்கள், செய்தி பற்றிய உங்கள் எண்ணக் கருத்துக்கள், குறை நிறைகளைப் பகிர்ந்திட இங்கே க்ளிக் செய்யுங்கள்

இந்தப் பதிவு உங்களுக்குப் பிடித்தால், கீழே உள்ள Facebook Button இல் க்ளிக் செய்து உங்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்!!

error: Alert: Content is protected !!