டிப்பர் சாரதியைத் தாக்கிய விசேட அதிரடிப்படையினர் – கிளிநொச்சியில் சம்பவம்

சற்று முன் கிளிநொச்சி பரந்தன் பகுதியில் மணல் ஏற்றிச் சென்ற டிப்பர் வாகனமொன்றை பின்தொடர்ந்து துரத்திவந்த விசேட அதிரடிப்படையினர். பரந்தன் சந்திக்கு அருகில் வைத்து அவரை இறக்கித் தாக்கியுள்ளனர். மக்கள் நடமாட்டம் அதிகம் காணப்பட்ட இடத்தில் இத்தாக்குதல் சம்பவம் இடம்பெற்றிருந்தமை அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. 

பரந்தன் ஏ35 வீதியில் இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. சாரதியைத் தாக்கிய அதிரடிப்படையினர் அவரைக் கைதுசெய்து சென்றுள்ளதாக தெரியவருகின்றது. கைது செய்யப்பட்டவர் பற்றிய விபரங்கள் தெரியவரவில்லை.

மிகத் துல்லியமான ஒலித் தெளிவில் தமிழில் ஓர் ரேடியோ… கேட்டு மகிழ இங்கே க்ளிக் செய்யுங்கள்

அன்பிற்கினிய நேயர்களே… எமது செய்திச் சேவை பிடித்தால், மேலும் செய்திகளை அறிந்து கொள்ள Puradsifm எனும் எமது பேஸ்புக் பக்கத்தினை மறக்காது லைக் செய்யுங்கள், செய்தி பற்றிய உங்கள் எண்ணக் கருத்துக்கள், குறை நிறைகளைப் பகிர்ந்திட இங்கே க்ளிக் செய்யுங்கள்

அனைத்துச் செய்திகளையும் ஒரே க்ளிக்கில் படிக்க, இங்கே க்ளிக் செய்யுங்கள்!!
error: Alert: Content is protected !!