விஸ்வரூபம் 2வை தொடர்ந்து நடிகை ஆண்ட்ரியாவின் அடுத்த படம் இது தான்..!

பாடகி, நடிகை என இரண்டிலும் பயணிக்கும் ஆண்ட்ரியாவின் நடிப்பில் தற்போது வெளியாகி இருக்கும் படம் ‘விஸ்வரூபம் 2’. கமல்ஹாசன் நாயகனாக நடித்துள்ள இப்படத்தில் பூஜாகுமாருடன் ஆண்ட்ரியாவும் நடித்துள்ளார். விஸ்வரூபம் 1 ஐ விட இந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் ஆண்ட்ரியா ‘முதல் பாகத்தை விட 2 ம் பாகத்தில் என்னுடைய பங்கு அதிகம். இதில் நான் யார், எனது நடிப்பு எப்படி என்பது பற்றி ரசிகர்கள் தெரிந்து கொள்வார்கள்.
பொதுவாக நான் படங்களில் நடிக்க எந்த நிபந்தனையும் விதிப்பதில்லை. கதை பிடித்து இருந்தால் உடனே சம்மதித்துவிடுவேன்.

விஸ்வரூபம் 2 இப்போது வெளியாகி உள்ளது. இதனை தொடர்ந்து வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷுடன் நடித்திருக்கும் வடசென்னையும் அடுத்தடுத்து வெளியாக இருக்கிறது. மல்டி ஹீரோயின் என்று எந்த படத்தையும் ஒதுக்குவதில்லை. கதையில் எனக்கான முக்கியத்துவத்தை தான் பார்க்கிறேன். எதிர்காலம் பற்றிய யோசனை எதுவும் இல்லை. நல்ல படங்கள் பண்ண வேண்டும் என்பது மட்டும் தான் இப்போதைக்கு என்னுடைய குறிக்கோள்’ என்று கூறி இருக்கிறார்.
ஆண்ட்ரியா அடுத்து இயக்குனர் நாஞ்சில் இன் ‘கா’ என்ற படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார்.

அனைத்துச் செய்திகளையும் ஒரே க்ளிக்கில் படிக்க, இங்கே க்ளிக் செய்யுங்கள்!!
error: Alert: Content is protected !!