சென்னையை அதிர வைத்து பாக்ஸ் ஆபிஸில் விஸ்வரூபம்-2. முதல் நாள் வசூல் விபரம் இதோ ..!

கமல்ஹாசன் எழுதி, இயக்கி நடித்து நேற்றைய தினம் உலகம் முழுவதும் வெளியான விஸ்வரூபம் 2 படமானது ரசிகர்களிடம் கொஞ்சம் கலவையான விமர்சனங்களை தான் பெற்று வருகின்றது. ஒரு சாராருக்கு மிகவும் பிடித்திருக்க ஒரு சாராரை திருப்திபடுத்தவில்லை எனவும் கூறப்படுகின்றது. ஆனாலும் கமலின் ரசிகர்களுக்கு கொண்டாட்டமான படம் தான் என்பதில் ஐயம் இல்லை.

இந்நிலையில் விஸ்வரூபம்-2 சென்னையில் மட்டும் முதல் நாள் ரூபாய் 92 லட்சம் வசூல் செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது தான் கமல்ஹாசனின் படங்களிலேயே சென்னையில் பெரிய ஓப்பனிங் என்று கூறலாம். இதற்கு முன்னர் இப்படி ஒரு ஆரம்பம் கமலுக்கு கிடைத்ததில்லை.

அத்துடன், இந்த ஆரம்ப கலெக்‌ஷன் மூலம் ஆல் டைம் சென்னை ஓப்பனிங் பாக்ஸ் ஆபிஸில் விஸ்வரூபம்-2 படமானது 7வது இடத்தை பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

அனைத்துச் செய்திகளையும் ஒரே க்ளிக்கில் படிக்க, இங்கே க்ளிக் செய்யுங்கள்!!
error: Alert: Content is protected !!