நேரு சுயநலத்துடன் நடந்து கொண்டார் – தலாய்லாமா

இந்தியாவின் கோவாவில் உள்ள கோவா மேலாண்மைக் கல்வி நிறுவனத்தில் மாணவர்கள் மத்தியில் உரையாற்றிய திபெத்தின் ஆன்மீகத் தலைவர் தலாய்லாமா, மாணவி ஒருவரின் கேள்விக்குப் பதிலளிக்கும் போது,  இந்திய பிரதமராக முகமது அலி ஜின்னா பதவியேற்க வேண்டுமென்றே காந்தி நினைத்தார்.நேரு தவறு செய்துவிட்டார். அவர் சுயநலத்துடன் இந்திய பிரதமர் பதவியை தானே வகிக்க நினைத்தார். அப் பதவியை முகமது அலி ஜின்னாவுக்கு விட்டுக் கொடுத்திருந்தால் மகாத்மா காந்தி நினைத்தபடி இந்தியா பாகிஸ்தான் பிரிவினை ஏற்பட்டிருக்காது. எனக் குறிப்பிட்டிருந்தார்.

இக் கருத்தானது இந்தியாவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில் , எனது கருத்து பெரும் சர்ச்சையாகியுள்ளது. நான் கூறிய கருத்துக்களில் ஏதாவது தவறுகள் இருப்பின் மன்னிப்புக் கேட்டுக்கொள்கின்றேன். என்று தெரிவித்துள்ளார் தலாய் லாமா.

அனைத்துச் செய்திகளையும் ஒரே க்ளிக்கில் படிக்க, இங்கே க்ளிக் செய்யுங்கள்!!
error: Alert: Content is protected !!