உயிரி எரிபொருள் மூலம் 12 கோடி மிச்சப்படுத்த திட்டம் – பாரத பிரதமர் மோடி

பெற்றோலில் எதனோல் கலப்பதன் மூலம் தயாரிக்கப்படும் உயிரி எரிபொருளால் எதிர்வரும் காலத்தில் 12 ஆயிரம் கோடி ரூபாய் மிச்சமாகும் என்று பாரதப் பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டுள்ளார். உலக உயிரி எரிபொருள் தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி ஆற்றிய உரையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

உயிரி எரிபொருளானது மசகு எண்ணெயில் தங்கியிருக்கின்ற நிலைமையை கட்டுப்படுத்துவதுடன் சூழலுக்கு நட்பானது, விவசாயிகளுக்கு வேலைவாய்ப்பை அதிகரிக்கக்கூடியது என்று மேலும் அவர் குறிப்பிட்டார்.

2002 இல் எதணோலை பெற்றோலில் கலக்கும் திட்டம் தொடங்கப்பட்ட போதிலும் பின்வந்த அரசுகள் இதில் கவனம் செலுத்தவில்லை எனவும் தற்போது மீண்டும் இது செயற்படுத்தப்படுவதாகவும் குறிப்பிட்ட பிரதமர், 2013, 14 காலப்பகுதியில் 38 கோடி லீட்டர் எதனோல் கலந்த பெற்றோல் தயாரிக்கப்பட்டதாகவும் இது 2017, 18 காலப்பகுதியில் 141 கோடி லீட்டராக அதிகரிக்கப்பட்டதாகவும் குறிப்பிட்டார்.

இதனால் எண்ணைய் இறக்குமதியில் 4000 கோடி ருபாயை மிச்சப்படுத்த முடிந்ததாகவும்,  அடுத்த வருடத்தினுள் 12 ஆயிரம் கோடி ருபாவை மிச்சப்படுத்த முடியும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

 

அனைத்துச் செய்திகளையும் ஒரே க்ளிக்கில் படிக்க, இங்கே க்ளிக் செய்யுங்கள்!!
error: Alert: Content is protected !!