தன்னுடன் வர மறுத்த திருமணமான 18 வயது பெண்ணுக்கு வளர்ப்பு தந்தை செய்த கொடூர செயல்.. அதுவும் நீதிமன்றில்..!

இந்தியாவில் நடக்கும் கொடூரங்களுக்கு எப்போதும் முடிவு கிடைப்பது இல்லை இது நாம் அறியாத விடயம் இல்லை . அதிலும் சாதி கொடுமை என்பது தீராத தொற்று நோய் போல ஒட்டிக்கொண்டு இருக்கிறது இந்திய மக்களிடம் . எத்தனை பெரியார் வந்தாலும் திர்க முடியாத இன்னுமொன்று மதம் .

இன்றைய காலத்தில் படிக்காதவர்கள் புரிந்துகொள்ளும் விடயத்தை படித்தவர்களால் புரிந்துகொள்ள முடிவதில்லை .உண்மை தான் இந்தியாவில் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த ரமேஷ் என்பவர் தன் வளர்ப்பு மகளான மம்தாவிற்கு செய்த கொடூரம் தான் இது . மம்தா வேறு சாதியை சேர்ந்த இளைஞனை காதலித்து திருமணம் செய்துகொண்டார் . இது தந்தையான ரமேஷுக்கு பிடிக்கவில்லை .

18 வயது ஆவதற்கு 2 மாதங்கள் இருந்த நிலையில் மம்தா திருமணம் செய்ததால் அவரது கணவர் மீது ரமேஷ் போலீசில் புகார் அளித்தார் . இதனால் மம்தாவின் கணவர் கைது செய்யப்பட்டார் . தந்தையுடன் செல்ல மறுத்த மம்தா கணவரின் வீட்டில் இருந்தார் . நேற்று நீதிமன்றம் வந்த மம்தாவை வளர்ப்பு தந்தையான ரமேஷ் தன்னுடன் வீட்டிற்கு வந்துவிடும் படி கூறியுள்ளார் .

இதனை மறுத்த மம்தாவை ஏற்கனவே ரமேஷ் நீதிமன்ற அருகில் தயார் நிலையில் ரவுடிகளிடம் கொலை செய்யும்படி கூற நீதிமன்ற வாயிலில் மம்தா கொடூரமாக சுட்டுக் கொல்லப்பட்டர் . மம்தாவை காப்பாற்ற சென்ற காவலரும் பரிதாபமாக பலியானார் . இது தொடர்பாக போலீசார் விசாரணையை
ஆரம்பித்துள்ளனர் ..!

அனைத்துச் செய்திகளையும் ஒரே க்ளிக்கில் படிக்க, இங்கே க்ளிக் செய்யுங்கள்!!
error: Alert: Content is protected !!