சமூக விரோதக் குழுக்களை தடுக்க உதவுங்கள் – யாழில் பொலிசார் மக்களிடம் துண்டுப்பிரசுரம் விநியோகம்.

யாழிலே சமூக விரோதக் குழுக்களின் அடாவடித்தனம் அண்மைய நாட்களில் அதிகரித்து வருகின்றமை அனைவரும் அறிந்ததே. சிலர் இக் குழுக்களின் செய்பாட்டினால் பொலிசார் மீது அதிருப்தியை வெளியிட்டு வரும் நிலையில்; பாழ்ப்பாண காவல் துறையினர் சற்றுமுன் வாகனத் தொடரணி ஒன்றின் மூலம் மக்கள் விழிப்பு நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.

சமூகவிரோதக் குழுக்களின் செயற்பாட்டைக் கட்டுப்படுத்துவதற்கு இதன் மூலம் அவர்கள் மக்களின் ஆதரவை நாடியுள்ளனர்.இவ் வாகனத் தொடரணியில் வடக்கு பொலிஸ் அதிகாரிகளும் ஏனையோரும் இணைந்துள்ளதுடன் மக்களிடம் விழிப்புணர்வு பிரசுரங்களையும் விநியோகித்து வருவதைக் காணமுடிகின்றது.

அனைத்துச் செய்திகளையும் ஒரே க்ளிக்கில் படிக்க, இங்கே க்ளிக் செய்யுங்கள்!!
error: Alert: Content is protected !!