கேரளாவில் பாதிக்கப்பட்ட மக்களுக்களுக்கு வருத்தம் தெரிவித்த ஜீவி பிரகாஷ் ..!

இசையமைப்பாளராக தனது பயணத்தை ஆரம்பித்தவர் ஜீ.வி.பிரகாஷ். அதன் பின்னர் பாடகர், நடிகர், தயாரிப்பாளர் என பன்முக திறனை வெளிப்படுத்தி தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தினை உருவாக்கிக் கொண்டார்.
அதன் பின்னர் சமூக சேவைகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். ஜல்லிக்கட்டு, தூத்துக்குடி பிரச்சனை, நீட் தேர்வு என எந்த ஒரு புரட்சி, போராட்டமாக இருந்தாலும் சினிமாவில் இருந்து ஒலிக்கும் முதல் குரல் ஜி.வி.பிரகாஷ்ஷினுடையதாக தான் இருக்கும்.

கடவுளின் ஊர் என அழைக்கப்படும் கேரளாவில் வரலாறு காணாத அளவில் ஏற்பட்டுள்ள மழை,வெள்ளம் நிலச்சரிவு காரணமாக மிகுந்த சேதங்கள் நிகழ்ந்துள்ளன. மனிதர்கள், விலங்குகள் என அனைவரும் வெள்ளத்தில் அடித்து செல்லப்படும் சொல்லெனா துயர நிலை அங்கு ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக இடுக்கி, கோழிக்கோடு, வயநாடு, மலப்புரம் மற்றும் கொல்லம் மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி கடந்த 72 மணி நேரத்தில் 40 பேர் வரையில் உயிரிழந்ததாக கணக்கிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் மக்களுக்கு உதவும் விதமாக பாதிக்கப்பட்ட மக்கள் தொடர்பு கொள்வதற்கு ஹெல்ப்லைன் நம்பர்களை தனது ட்விட்டரில் பகிர்ந்துள்ளார் ஜிவி பிரகாஷ்.
இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு அனுதாபங்களை தெரிவித்துள்ளார் ..!

அனைத்துச் செய்திகளையும் ஒரே க்ளிக்கில் படிக்க, இங்கே க்ளிக் செய்யுங்கள்!!
error: Alert: Content is protected !!