சர்ஜுனின் இயக்கத்தில் மீண்டும் பேயாக தோன்றும் நயன்தாரா ..!

கதாநாயகர்கள் வாழும் சினிமா உலகில் கதையின் நாயகியாய் கொடிகட்டி பறக்கும் நயன்தாரா தொடர்ந்து வெற்றிப் படங்களை கொடுத்து வருகிறார். அந்த வகையில் வரும் ஆக்ஸ்ட்டு 17 இல் பலத்த எதிர்ப்புகளுக்கிடையில் நயந்தாராவின் கோலமாவு கோகிலா படம் வெளியாக உள்ளது.

இதனை தொடர்ந்து பல முன்னணி ஹீரோக்களின் படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ள நிலையிலும் மற்றுமொரு கதாநாயகிக்கு முக்கியத்துவம் இருக்கும் படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார். இதுவும் ஒரு பேய் படம் தான். அதற்காக பெரிய பேய் பங்களா ஒன்றினை தயாராக்கி வருகின்றனர்.

இப்படத்தினை லக்ஷ்மி, மா போன்ற குறும்படங்களை இயக்கிய சர்ஜுன் இயக்குகிறார். இயக்குனர் சர்ஜுனின் இயக்கத்தில் வரலக்ஷ்மி சரத்குமாரின் நடிப்பில் உருவான ‘எச்சரிக்கை’ எனும் படம் விரைவில் வெளியாக உள்ளது. இப்படத்தை தொடர்ந்து நயன்தாரா நடிக்கும் படத்தை இயக்குவுள்ளார்.

அனைத்துச் செய்திகளையும் ஒரே க்ளிக்கில் படிக்க, இங்கே க்ளிக் செய்யுங்கள்!!
error: Alert: Content is protected !!