பிரபல நடிகை ராய் லட்சுமியின் புதிய முயற்சி ..இது சரி வெற்றி பெறுமா..?

பத்து வருடங்களுக்கு மேலாக சினிமாவில் இருந்தாலும் தனக்கென ஒரு இடத்தினை பிடிக்க முடியாமல் போராடி வருகிறார் ராய் லட்சுமி. இதுவரையில் எந்த ஒரு முன்னணி கதானாயகனுடன் ஜோடி சேரவில்லை. ஏதோ கிடைக்கும் படங்களில் நடித்து வருபவர். தமிழ், தெலுங்கு, கன்னடம் மலையாளம் என மாறி மாறி கிடைக்கும் படங்களில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் ஹிந்தி பட உலகின் பக்கமும் சென்று வர விரும்பி கடந்த வருடம் ஜூலி 2 என்ற படத்தில் கதையின் நாயகியாய் நடித்திருந்தார். ஆனாலும் அவரால் முன்னணிக்கு வரமுடியவில்லை.
இப்போது தெலுங்கு சினிமாவில் மீண்டும் ஒரு சந்தர்ப்பம் கதையின் நாயகியாக நடிக்க கிடைத்துள்ளது.

கிஷோர்குமார் எனும் புதிய இயக்குனர் இயக்கத்தில் ‘வேர் இஸ் த வெங்கட லக்ஷ்மி’ படத்தில் கதையின் நாயகியாய் கிராமத்து பெண்ணாக நடிக்கிறார்.
இந்த படம் தனது திரையுலக வாழ்க்கையில் ஒரு மாற்றத்தை கொண்டு வரும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

அனைத்துச் செய்திகளையும் ஒரே க்ளிக்கில் படிக்க, இங்கே க்ளிக் செய்யுங்கள்!!
error: Alert: Content is protected !!