இன்று காலை சிங்கப்பூரிலிருந்து வந்த தங்க பிஸ்கட்டுகள்

சிங்கப்பூரிலிருந்து கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையம் ஊடாக  சிங்கப்பூர் வந்த இருவரின் நடவடிக்கைமேல் சந்தேகம் கொண்டு சோதனை மேற்கொண்ட சுங்க அதிகாரிகள் அவர்களிடமிருந்து ஒருதொகை தங்க பிஸ்கட்டுகளைக் கைப்பற்றியுள்ளனர்.

இன்று அதிகாலை இடம்பெற்ற இச் சம்பவத்தில் சந்தேக நபர்களிடமிருந்து 10 தங்க பிஸ்கட்டுகள் கைப்பற்றப்பட்டிருந்த போதிலும் கைப்பற்றப்பட்ட பிஸ்கட்டுக்களின் பெறுமதி 60 இலட்சத்திற்கும் அதிகமென சுங்கத்துறை அதிகாரிகள் தகவல் வெளியிட்டுள்ளனர்.

ஒருவரின் இடுப்புப்பட்டியிலிருந்தும் மற்றவரின் கைப் பையிலிருந்தும் இவை கைப்பற்றப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

அனைத்துச் செய்திகளையும் ஒரே க்ளிக்கில் படிக்க, இங்கே க்ளிக் செய்யுங்கள்!!
error: Alert: Content is protected !!