யாழ் நாவற்குழியில் அரச காணிகளில் குடியிருப்போருக்கு எதிரான வழக்கு மீண்டும் ஒத்திவைப்பு

யாழ்ப்பாணம் நாவற்குழியில் அரச காணிகளில் குடியிருப்போருக்கு எதிராக நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டிருந்த 64 வழக்குகளில் இன்று 34 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது விடயத்திற்குப் பொறுப்பான அமைச்சருடன் பேச்சுவார்த்தை மேற்கொள்ளப்படவேண்டுமென கேட்டுக்கொண்டதற்கு இணங்க எதிர்வரும் நவம்பர் மாதம் ஒன்பதாம் திகதிவரை வழக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.

தேசிய வீடமைப்பு அதிகாரசபைக்கு சொந்தமான காணியில் அத்துமீறி வசிக்கின்றனர் எனக் கூறப்பட்டு அவர்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டு அவ்விடத்தில் வீடமைப்புத் திட்டம் ஒன்று உருவாக்கப்படவேண்டும் எனவும் முன்னர் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

62 வழக்குகளில் மீதி 24 வழக்குகள் இம்மாதம் 24 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அனைத்துச் செய்திகளையும் ஒரே க்ளிக்கில் படிக்க, இங்கே க்ளிக் செய்யுங்கள்!!
error: Alert: Content is protected !!