வவுனியாவில் பொலிசாரின் வீதிச் சோதனையில் சிக்கியது 70 ஆயிரம் போதை மாத்திரைகள்

இன்று அதிகாலை மன்னார் வவுனியா வீதியில் சோதனை நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த பொலிசார் சிறியரக கார் ஒன்றை சோதனையிட்டபோது அதனுள் பல லட்சம் பெறுமதியான போதை மாத்திரைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. பொலிசார் அவற்றைக் கைப்பற்றியதோடு காரையும் அதில் பயணம் செய்த இளைஞன், யுவதி ஆகியோரையும் கைது செய்துள்ளனர்.

அவர்களிடம் பொலிசார் மேற்கொண்ட மேலதிக விசாரணைகளில் அப் போதை மாத்திரைகள் டுபாயிலிருந்து கடல் வழியாக இலங்கை மன்னாருக்கு கொண்டு வரப்பட்டதாகவும் மன்னாரிலிருந்து கொழும்புக்கு அவை கடத்திச் செல்லப்பட்டதாகவும் தெரிய வந்துள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.

கைப்பற்றப்பட்ட போதை மாத்திரைகளின் பெறுமதி 20 மில்லியனுக்கும் அதிகம் எனவும், அவ்வாறு கைப்பற்றப்பட்ட மாத்திரைகள் ஓர் வலி நிவாரணி எனவும் 50 மில்லிக்  கிராம் அளவே மருத்துவ ஆலோசனைகளுடன் எடுக்கப்படக் கூடியதெனவும் ஆனால் இம் மாத்திரைகள் ஒவ்வொன்றும் 200 மில்லிக்கிராம் அளவாக காணப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் குறித்த வகை மாத்திரைகள் பாடசாலை மாணவர்களுக்கு விநியோகிக்கும் பொருட்டு எடுத்துச் செல்லப்பட்டதாகவும், யாழ்ப்பாணத்திலும் அவ்வகையான மாத்திரைகள் ஏற்கனவே விற்பனைக்கு அனுப்பப்பட்டதாகவும் சந்தேகநபர்கள் தெரிவித்துள்ளனர்.

யாழ் பெற்றோரே! அவதானம்.

அனைத்துச் செய்திகளையும் ஒரே க்ளிக்கில் படிக்க, இங்கே க்ளிக் செய்யுங்கள்!!
error: Alert: Content is protected !!