கருக்கலைப்புக்கு ஆதரவாக தீர்ப்பை எதிர்பார்த்த பெண்கள் ஏமாற்றர் – ஆஜென்ரீனாவில் சம்பவம்

ஆஜென்ரீனாவில் தாயின் உயிருக்கு ஆபத்து என மருத்துவர்கள் சிபார்சு செய்யும் சமயத்தில் மாத்திரம் சட்டபூர்வமான கருக்கலைப்புக்கு அனுமதி வழங்கப்படுகின்றது. இந்நிலையில் கருவுற்று 14 வாரங்களுக்குள் கருக் கலைக்கப்படுவதற்கான சட்ட பூர்வமான அனுமதியைக் கோரி நேற்று முன்தினம் நாடாளுமன்றில் கொண்டுவரப்பட்ட சட்ட மசோதா தோற்கடிக்கப்பட்டுள்ளது.

கடந்த வருடம் சட்விரோத கருக்கலைப்புக் காரணமாக 30 ற்கும் அதிகமான பெண்கள் இறந்ததை அடுத்து அதனை மேற்கோள் காட்டி கருக்கலைப்பை சட்டபூர்வமானதாக்குவதற்கான மசோதா கொண்டுவருவதாக கூறப்பட்டது. இந்நிலையில் அதற்கு ஆதரவாக 32 உறுப்பினர்களும் எதிராக 38 உறுப்பினர்களும் வாக்களித்ததால் அம்மசோதா நிராகரிக்கப்பட்டது.

கருக்கலைப்புக்கு ஆதரவாக சட்டம் வரும் எனக் காத்திருந்த பெண்களும் அவர்களின் வழக்கறிஞர்களும் இச் செய்தியறிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதுடன், சட்டத்தில் இடம் இருக்கின்றதோ இல்லையோ பெண்கள் தமது விருப்பத்தின் பேரில் கருக்கலைப்பு செய்துகொள்வார்கள் எனத் தெரிவித்தனர்.

அனைத்துச் செய்திகளையும் ஒரே க்ளிக்கில் படிக்க, இங்கே க்ளிக் செய்யுங்கள்!!
error: Alert: Content is protected !!