இன்று கொடியேற்றம் காணும் – இலங்கை யாழ் தெல்லிப்பளை துர்க்கை அம்மன்

இலங்கையின் பிரசித்தி பெற்ற அம்மன் ஆலயங்களில் ஒன்றான தெல்லிப்பளை ஶ்ரீ துர்க்கை அம்மன் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம் இன்று காலை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகின்றது.

தொடர்ந்து 12 நாட்கள் இட்பெறவுள்ள வருடாந்த மகோற்சவத்தின் சிறப்பு உற்சவங்களாக, எதிர்வரும் 18 ஆம் திகதி சனிக் கிழமை மஞ்சத் திருவிழாவும், 21 ஆம் திகதி செவ்வாய்க் கிழமை வேட்டைத் திருவிழாவும், 22 ஆம் திகதி புதன் கிழமை சப்பரத் திருவிழாவும், 23 ஆம் திகதி வியாழக் கிழமை காலை 9.00 மணிக்குத் தேர்த் திருவிழாவும், 24 ஆம் திகதி வெள்ளிக் கிழமை தீர்த்தத் திருவிழாவும் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாண்டும் ஆலயத்திற்கு வழமைபோல் பெருந்திரளான பக்தர்கள் வருகைதருவர் என எதிர்பார்க்கப்படுகின்றது.

பேஸ்புக்கில் Like செய்ய!!
error: Alert: Content is protected !!