இலங்கை கடற்பரப்பில் கரையொதுங்கிய இந்திய வைத்திய கழிவுகள் பற்றி விசாரணை ஆரம்பம்

அண்மையில் புத்தளம் கடற்கரைப் பிரதேசத்தில் கரையொதுங்கியுள்ள இந்தியாவின் இலட்சனைகள் பொறிக்கப்பட்ட மருத்துவமனைக்  கழிவுப் பொருட்களால் மீனவர்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளது. அவை ஏதும் பாதிப்புக்களை ஏற்படுத்துமோ எனும் அச்சத்தில் அவர்கள் உள்ள நிலையில்,

அக் கழிவுப்பொருட்கள் தொடர்பான முதற்கட்ட ஆய்வு நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இலங்கை கடல்சார் பாதுகாப்பு அதிகாரசபையின் அதிகாரிகள் இன்று (14.08.2018) புத்தளம் கடற்கரைக்குச் சென்று இது தொடர்பான ஆய்வுகளில் ஈடுபடவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஆய்வுப் பணிகள் முடியும்  வரை கடற்கரையை பயன்படுத்துவதை மக்கள் தவிர்க்கும் படியும் அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

புத்தளம் கடற்கரையில் கரையொதுங்கிய கழிவுப்பொருட்கள் தொடர்பில் பரிசோதனை

 

இந்தப் பதிவு உங்களுக்குப் பிடித்தால், கீழே உள்ள Facebook Button இல் க்ளிக் செய்து உங்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்!!

அனைத்துச் செய்திகளையும் ஒரே க்ளிக்கில் படிக்க, இங்கே க்ளிக் செய்யுங்கள்!!
error: Alert: Content is protected !!