இங்கிலாந்தில் வெளியே தலைகாட்டத் தயங்கும் இந்திய கிரிக்கெட் வீரர்கள்.

இங்கிலாந்திற்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகின்ற இந்திய அணி அங்கு நடைபெற்ற இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் மோசமான பின்னடைவைச் சந்தித்துள்ள நிலையில் விமர்சகர்களால் பல்வேறு விமர்சனங்களும் முன்வைக்கப்பட்டு வருகின்றது. இந் நிலையில் நாளை மறுதினம் (18.08) மூன்றாவது போட்டி நார்டிங்காமில் தொடங்க இருக்கின்றது. இந்திய அணி வீரர்கள் அங்கு சென்று சேர்ந்துள்ள போதிலும் தாம் இருக்கினற ஹோட்டல் அறைகளை விட்டு வெளியே வரத் தயங்குவதாகத் தெரிகின்றது.

இங்கிலாந்திற்கு சுற்றுப்பயணமாக சென்றுள்ள இந்திய அணி மூன்று ஒருநாள் போட்டிகள், மூன்று ரி20 போட்டிகள், 5டெஸ்போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகின்ற நிலையில் ரி20 தொடரை இந்தியாவும், ஒருநாள் போட்டித் தொடரை இங்கிலாந்தும் வென்றுள்ளன.

நடைபெற்று வருகின்ற போட்டிகளில் முதல் டெஸ்ட் போட்டி ஆகஸ்ட் 01 இல் நடைபெற்றிருந்தது. இதில் இந்தியாவை  31 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து வென்றிருந்தது.  இரண்டாவது போட்டியிலும் ஒரு இன்னிங்க்ஸ் மற்றும் 159 ரன்கள் என்ற நிலையில் இந்தியாவை இங்கிலாந்து வென்று 2 – 0 என்ற நிலையில் உள்ளது.

பேஸ்புக்கில் Like செய்ய!!

இத் தொடரிலே இந்திய வீரர்களின் செயல்திறன் பற்றிக் கருத்துரைத்த இங்கிலாந்தின் முன்னாள் கப்டன் நாசிர் ஹுசைன் “இங்கிலாந்து மற்றும் இந்திய அணிகளுக்கிடையிலான இத் தொடர் ஆண்களுக்கும் சிறுவர்களுக்கும் இடையே நடைபெறும் தொடர்போல் உள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

இந் நிலையிலேயே இந்திய வீரர்கள் சோர்வடைந்துள்ளதாக தெரிகின்றது.

 

error: Alert: Content is protected !!