பார்சிலோனா செல்லும் திருகோணமலை கிண்ணியா மாணவன்

திகோணமலை கிண்ணியா அல் அக்ஸா தேசிய பாடசாலை மாணவன் கே.எம்.ஹாதிம் பார்சிலோனாவிற்குச் செல்லும் வாய்ப்பைப் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 12 வயதிற்கு உட்பட்டவர்களுக்கான உதைபந்தாட்டப் போட்டியில் பங்குபற்றுவதற்காகவே இம் மாணவன் பார்சிலோனாவிற்குச் செல்லவுள்ளதாக தெரியவருகின்றது.  அண்மையில் இலங்கை உதைபந்தாட்ட சம்மேளனமும் இலங்கை கல்வி அமைச்சும் இணைந்து நடத்திய ரோட் ரூ பார்சிலோனா போட்டியில் பங்குபற்றிய பல அணிகளை தோற்கடித்த கிண்ணியா அல் அக்‌ஷா அணியானது சம்பியனை வென்றிருந்தது. இப் போட்டியில் ஹாதிம் மிகவும் சிறப்பாக விளையாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந் நிலையிலேயே இலங்கையிலிருந்து செல்லும் போட்டியாளர்களில் மேற்படி சிறுவனும் உள்ளடங்குவதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இப் போட்டிகளில் பங்குபற்றுவதற்காக இலங்கையிலிருந்து முன்று பெண்களும் மூன்று ஆண்களும் செல்லவுள்ள நிலையில் கிழக்கு மாகாணத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரே மாணவர் இவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பேஸ்புக்கில் Like செய்ய!!

 

error: Alert: Content is protected !!