இந்திய – இங்கிலாந்து அணிகள் மோதும் 3 வது டெஸ்ட் – நாளை நர்டிங்காமில்

இந்திய – இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான மூன்றாவது டெஸ்ட் ஆட்டம் நாளை நர்டிங்காமில் ஆரம்பிக்கின்றது. முதல் இரு போட்டிகளிலும் மிக மோசமான தோல்வியைத் தழுவிக்கொண்ட இந்திய அணி இப்போட்டியில் வெற்றிபெறவேண்டிய கட்டாயத்தில் உள்ளது. இந்நிலையில் போட்டியில் உத்வேகத்துடன் செயற்படுவதற்காக இந்திய வீரர்கள் நேற்று கடுமையான பயிற்சிகளில் ஈடுபட்டிருந்தனர்.

இந்திய அணி குறித்து அதன் பயிற்றுவிப்பாளர் ரவிசாஸ்திரி செய்தியாளர்களிடம் பேசும்போது, தொடர் ஆரம்பித்த தினத்திலிருந்தே காலநிலை சீரின்மையாக உள்ளது. எனவே அதற்கேற்ப அணியினர் தயாராகவேண்டியுள்ளது. இந்திய அணி வீரர் விராட் கோலி முதுகு வலியால் அவதிப்பட்ட போதும் தற்போது சுகமடைந்துள்ளதுடன் பயிற்சியிலும் ஈடுபடுகின்றார். என்று குறிப்பிட்டார்.

இந்நிலையில் இங்கிலாந்து அணியும் இந்திய அணியின் தாக்குதலை எதிர்கொள்ளத் தயாராக இருப்பதாக தெரிகின்றது. அணியின் ஆல் ரவுண்டரான ஸ்டோக் அணியில் மீண்டும் இணைத்துக் கொள்ளப்பட்டதாகவும் எனினும் நாளைய தொடரில் அவர் இடம்பெறுவது பற்றிய தகவல்கள் வெளியாகவில்லை எனவும் தெரிவிக்கப்டுகின்றது.

பேஸ்புக்கில் Like செய்ய!!

error: Alert: Content is protected !!