நேற்றைய இங்கிலாந்து – இந்தியா டெஸ்ட் தொடரில் இந்திய அணியின் போராட்டம்

இந்திய கிரிக்கெட் அணியானது இங்கிலாந்துக்கான சுற்றுப்பயணத்தில் இங்கிலாந்துடன் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. முதல் இரண்டு போட்டிகளிலும் இங்கிலாந்து அணி இந்திய அணியை மோசமாக தோல்வியடையச் செய்திருந்தது. இந்நிலையில் நேற்றைய மூன்றாவது ஆட்டம் ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது.

 நேற்யை தினம் நர்டிங்காமில் தொடங்கிய 3 ஆவது போட்டியில் இங்கிலாந்து அணி நாணயச் சுழற்சியில் வென்று முதலில் பந்து வீசுவதற்கு இணங்கியது. தொடர்ந்து இந்தியா தனது முதல் இன்னிங்சை தொடங்கியிருந்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக இந்திய அணியின் ஷிகர் தவானும், லோகேஸ் ராகுலும் களம் புகுந்தனர்.

நேற்றைய ஆட்டத்தில் விராட் ஹோலி தனது 18 வது அரைச் சதத்தையும், ரகானே 13 வது அரைச் சதத்தையும் பெற்றுக்கொண்டனர். விராட் ஹோலி சதத்திற்கு மூன்று ஓட்டங்கள் இருக்க ஆட்டமிழந்து சென்றார். ஆட்ட நேர முடிவில் இந்திய அணியானது 6 விக்கெட்டுக்களை இழந்து 307 ரன்களைப் பெற்றுள்ளது.

பேஸ்புக்கில் Like செய்ய!!
error: Alert: Content is protected !!