வல்லாரையில் உள்ள மருத்துவ குணங்கள்

வல்லாரை கீரை வல்லமை மிக்க கீரையாக பயன்படுகிறது. இந்த வல்லாரை காசம், மேகம், இளநரை போன்றவ்றை குணப்படுத்த, வல்லாரை விழுதை தேங்காய் பால் விட்டு, அரைத்து மாதக் கணக்கில் சாப்பிட்டால் குணமடைந்து விடும்.

காய்ச்சல் வரும் போது வல்லாரையால், செய்த மாத்தரைகளை எடுக்கும் போது, உடனே சுகம் வரும். உடலில் ஏற்படும் புண்களை மாற்றுவதில் வல்லாரை கீரை சிறந்த மருந்தாக அமையும். அதிகமாக காய்ச்சல் உள்ளவர்கள் வல்லாரை இலையுடன், மிளகு, துளசி இலை ஆகியவற்றை சமளவாக எடுத்து மெழகு போல அரைத்து மாத்திரைகள் போல எடுத்து , அதை உலர்த்தி வெந்நீரோடு சேர்த்து, சாப்பிட்டால் காய்ச்சல் குணமாகும்.

வல்லாரை கீரையைக் கொண்டு யானைக்கால் நோயை குணப்படுத்த முடியும். வீக்கம், தசை சிதைவு உள்ளவர்களுக்கு வல்லாரையை அரைத்து கொடுத்தால் எளிதில் குணமாகும். வல்லாரையில் இரும்புச்சத்து, சுண்ணாம்புச்சத்து, ‘எ’, ‘சி’ உயிர்ச்சத்து மற்றும் தாதுஉப்புக்கள் என ஏராளமான சத்துக்கள் இதில் உள்ளது.

பேஸ்புக்கில் Like செய்ய!!

கால் நரம்புகளை பாதிக்கும் பிரச்சனையாக வெரிக்கோஸ் நோய் உள்ளது. இதற்கு வல்லாரையை கொண்டு குணப்படுத்தும் ஆற்றல் உள்ளது. இந்த கீரையை சாப்பாட்டில் தினம் எடுத்துக் கொள்வதால், நரம்பு மண்டலங்களை பலப்படுத்துகிறது. இதனால் உடல் செயற்பாடுகள் சீராக செயலப்படும்.

வால்லாரைக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ஆற்றல் உள்ளது. அதுமட்டுமின்றி மன அழுத்தத்தையும் தடுக்கிறது. உடலில் நோய் கிருமிகளின் தாக்கம் அதிகமா இருந்தால், இந்த வல்லாரையை பயன்படுத்தலாம். வலிகள் உடலில் இருந்தால், வலி உள்ள இடங்களில் இதை அரைத்து அதில் பூசி விட்டால் சுகம் கிடைக்கும்.

வல்லாரை சாப்பிட்டால் அறிவாற்றல் வளரும். அதை ஜீஸாக குடிப்பதால் இரத்தம் சுத்திகரிக்கப்படுகிறது. உடல் சோர்வு , பல்நோய்களுக்கு சிறந்த மருந்தாகும். பல்லில் மஞ்சள் தன்மை இருந்தால் வல்லாரையை கொண்டு மாற்றலாம்.

error: Alert: Content is protected !!