இந்திய அணி ரசிகர்களின் எதிர்பார்ப்பு வீணாகவில்லை – 3-ஆவது டெஸ்ட்டில் 203 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்திய இந்தியா

இங்கிலாந்திற்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடிவரும் இந்திய அணி முதலில் நடைபெற்ற இரண்டு போட்டிகளிலும் தோல்வியைத் தழுவிக்கொண்டதால் இந்திய அணி ரசிகர்கள் மிகுந்த ஏமாற்றமும் கோபமும் அடைந்திருந்தனர். இந்நிலையில் தோல்லியிலிருந்து விடுபட  இந்திய அணிக்கு மூன்றாவது போட்டியை வெற்றி கொள்ளவேண்டிய தேவை இருந்தது.

மூன்றாவது டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்சிலே இந்தியா 329 ஓட்டங்கள் பெற்றுக்கொண்டதோடு இங்கிலாந்து அணி 161 ஓட்டங்களும் பெற்றது. தொடர்ந்து இரண்டாவது இன்னிங்சில் 352 ரன்கள் இந்தியாவால் பெறப்பட்டன. இதன்போது இந்தியா 7 விக்கெட்டுக்களை இழந்திருந்தது. இப் போட்டியில் விராட் ஹோக்லி சதத்தைப் பெற்றிருந்தார்.

பேஸ்புக்கில் Like செய்ய!!
521 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு இரண்டாவது இன்னிங்சில் நுழைந்த இங்கிலாந்து, அன்றைய ஆட்ட முடிவில் விக்கெட் இழப்பில்லாது வெறும் 23 ஓட்டங்களையே பெற்றிருந்தது.
நான்காவது நாள் ஆட்டத்தில் ஆரம்பத்தில் இங்கிலாந்து அணி தடுமாறத் தொடங்கியது. விரைவாக 4 விக்கெட்டுக்களை இழந்து 62 ஓட்டங்களுடன் நின்றபோது களம்புகுந்த ஜோஸ் பட்லர் – பென் ஸ்டோக் இணை இங்கிலாந்து அணிக்கு ஒரு உத்வேகத்தைக் கொடுத்திருந்தது. இவர்களை வீழ்த்துவது இந்திய அணிக்கு அப்போது இயலாத காரியமாகவே இருந்தது. அந்நிலையில் இங்கிலாந்து அணி சதம் ஒன்றையும் பெற்றுக்கொண்டது.
தேநீர் இடைவேளையின் பின்னர் இவ் இணையானது ஜஸ்ப்ரித் பும்ராவின் பந்து வீச்சில் உடைக்கப்பட்டது. இதன் பின் இங்கிலாந்து படிப்படியாக தொடர்ச்சியாக விக்கெட்டுக்களை இழக்கத் தொடங்கியது. இந்நிலையில் நான்காவது நாள் ஆட்டத்திலேயே இங்கிலாந்து தோல்வியை எதிர்பார்த்திருந்த நிலையில் ஐந்தாவது நாள் ஆட்டத்தின் ஆரம்பத்திலே இங்கிலாந்து விக்கெட்டுக்கள் முழுவதையும் இழந்து மொத்தமாக  317 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டு 203 ஓட்ட வித்தியாசத்தில் இந்தியாவிடம் தோல்வியைத் தழுவிக்கொண்டது.
இந்நிலையில் வரும் 30 ஆம் திகதி நடைபெறவுள்ள நான்காவது டெஸ்ட் தொடருக்காக இந்திய அணி புதிய உத்வேகத்தோடு காத்திருக்கின்றது.
error: Alert: Content is protected !!