25 சிறுவர்கள் பங்கேற்ற உலகத் தமிழர் பூப்பந்தாட்டப் பேரவையின் பயிற்சி முகாம் திருமலையில்.

 

நேற்று(01.09) உலகத் தமிழர் பூப்பந்தாட்டப் பேரவையினால் சிறுவர்களுக்கான பூப்பந்தாட்டப் பயிற்சி முகாம் ஒன்று திருகோணமலையில் நடாத்தப்பட்டுள்ளது. இப் பயிற்சி முகாமில் கனடாவிலிருந்து வந்த பூப்பந்தாட்டப் பயிற்சியாளர் திரு.ஜெயகாந்த் அவர்களும், பூப்பந்தாட்டப் பயிற்றுவிப்பாளர் திரு.கபிலன் அவர்களும் இணைந்து சிறுவர்களுக்கான பயிற்சியினை வழங்கியிருந்தனர்.

இப் பயிற்சி முகாமுக்கு கிழக்கு மாகாண விளையாட்டுத்துறை உதவிப் பணிப்பாளர் திரு.வி.ஜெயநீதன் அவர்களும் பங்கெடுத்திருந்தார்.

பேஸ்புக்கில் Like செய்ய!!

சிறுவர்களின் பூப்பந்தாட்ட திறன்களை விருத்தி செய்யும் முகமாக நடாத்தப்பட்ட இந் நிகழ்விலே அவர்கள் ஆர்வத்துடன் கரந்துகொண்டதுடன் பயிற்சியின் நிறைவிலே தாம் மிகவும் சந்தோசமாக பூப்பந்தாட்ட விளையாட்டின் பல நுணுக்கங்களை அறிந்து கொண்டதாகவும் தெரிவித்திருந்தனர்.

அத்தோடு இவ் விளையாட்டுப் பயிற்சியை ஏற்படுத்திக் கொடுத்த அனைவருக்கும் நன்றியையும் தெரிவித்திருந்தனர். மேலும் இப் பயிற்சியானது வரும் வாரத்தில் மட்டக்களப்பிலும் நடத்தப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

error: Alert: Content is protected !!