ஆசிய வலைப்பந்தாட்ட போட்டியில் அரையிறுதிக்குள் நுழைந்துள்ள இலங்கை பெண்கள் அணி.

தற்போது சிங்கப்பூரிலே நடைபெற்று வரும் ஆசிய வலைப்பந்தாட்ட தொடரின் இரண்டாவது சுற்றின் இறுதிப் போட்டியிலும் வெற்றியீட்டியதன் மூலம் இலங்கை அணி இப் போட்டியில் அரையிறுதிக்கான தகுதியைப் பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

முதல் போட்டியில் சைனிஸ் – தாய்பே அணியையும், இந்திய அணியையும் வெற்றிகொண்ட இலங்கை அணி இரண்டாம் சுற்றுக்கு முன்னேறியது. தொடர்ந்து நேற்று முன்தினம் ஆரம்பமாகிய இரண்டாவது சுற்றின் முதல் தொடரில் சிங்கப்பூரை வென்ற இலங்கை, இரண்டாவது தொடரில் நடப்பு ஷம்பியனான மலேசியாவுடன் மோதி அதனையும் வெற்றிகொண்டது.

பேஸ்புக்கில் Like செய்ய!!

தொடர்ந்து இரண்டாம் சுற்றின் மூன்றாவது போட்டியில் இன்று ஹொங்ஹொங் அணியுடன் களமாடிய இலங்கை அணி அபாரமான தனது விளையாட்டால் ஹொங்ஹொங்கையும் வீழ்த்தியது. இதன் மூலம் வெற்றிக் கிண்ணத்திற்கான ஈ-குழுவில் முதலிடத்தைப் பெற்றுக்கொண்டுள்ள இலங்கை அணி மீண்டும் அரை இறுதியில் நாளை மறுநாள் சிங்கப்பூர் அணியைச் சந்திப்பதற்குத் தயார் நிலையில் உள்ளது.

 

error: Alert: Content is protected !!