இங்கிலாந்து டெஸ்ட்டை ஆறுதல் வெற்றியோடு நிறைவு செய்யுமா இந்திய அணி?

இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்திற்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகின்ற நிலையில் இன்று ஐந்தாவதும் இறுதியுமான போட்டி லண்டன் ஓவலில் மைதானத்தில் நடைபெற்று வருகின்றது. இதிலே நாணயச் சுழற்சியில் வென்ற இங்கிலாந்து அணி துடுப்பாட்டத்தைத் தெரிவுசெய்து விளையாடி வருகின்றது.

முன்னதாக நடைபெற்ற நான்கு போட்டிகளிலும் மூன்று போட்டிகளில் இங்கிலாந்தும் ஒரு போட்டியில் இந்தியாவும் வென்றுள்ளன. ஆகவே இன்று நடைபெறும் போட்டியானது போட்டி முடிவுகளில் எந்தவிதமான தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்கின்ற போதிலும் இத் தொடரை வெற்றியோடு நிறைவு செய்ய இரு அணிகளும் கடுமையாக முயற்சி செய்யும் என்று எதிர்பார்க்கலாம்.

இந்த ஆட்டத்தில் இந்தியா வெற்றி பெறுமாயின்  இந்திய அணி ஆறுதல் வெற்றியுடனாவது இத் தொடரைப் பூர்த்தி செய்த திருப்தியை அடைந்துகொள்ளும். இல்லாவிட்டால் வழமையான அடக்கத்துடன் அங்கிருந்து வெளியேறும்.

அனைத்துச் செய்திகளையும் ஒரே க்ளிக்கில் படிக்க, இங்கே க்ளிக் செய்யுங்கள்!!
error: Alert: Content is protected !!