fbpx

த்ரெட்டிங் அழகா? ஆபத்தா? இதோ உங்களுக்காக..!

பெண்களின் அழகிற்கு மேலும் அழகு சேர்ப்பது அவர்களுடைய புருவங்கள்தான். அதேவேளை முகத்தில் இருக்கின்ற தேவையற்ற முடிகள் என்பது அவர்களுடைய முக அழகை கெடுப்பதாகவே பெரும்பாண்மையான பெண்கள் கருதுகின்றனர். அதற்காக அவர்கள் த்ரெட்டிங் என்கின்ற அழகுச் சிகிச்சை முறையை நாடுகின்றனர் உண்மையில் இந்த த்ரெட்டிங்கால் பெண்களுக்கு அழகா ஆபத்தா ஏற்படுகின்றது என்பது பற்றி பார்க்கலாம்.த்ரெட்டிங் என்பது முகத்திலுள்ள தேவையற்ற முடிகளை  நிக்குகின்ற முறை ஆகும். இது மிகவும் கவனமாகச் செய்ய வேண்டிய ஒரு சிகிச்சை முறை. இல்லாவிட்டால் இதனால் பல பிரச்சினைகள் ஏற்படுவதற்கு வாய்ப்பு உண்டு.அன்பிற்கினிய நேயர்களே, புரட்சி வானொலி – செய்திச் சேவையின் இந்தப் பதிவு பிடித்திருந்தால், தயவு செய்து ஷேர் செய்து உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகம் செய்யுங்கள்.

இந்த த்ரெட்டிங்கால் ஏற்படக் கூடிய பிரச்சினைகள் என்னவென்று பார்க்கலாம்.

🌠த்ரெட்டிங் செய்வதால் சிலருக்கு ஒவ்வாமையினால் தோல் சிவந்து புண்கள் ஏற்படும்.
🌠சிலருக்கு அரிப்பு ஏற்பட்டு எக்சிமா என்கின்ற தோல் நோய் கூட வரலாம்.
🌠தோல் கறுத்தப்போகும் தன்மையும் ஏற்படுகின்றது.
🌠வெளிப்படையாகத் தெரியாத வெண்புள்ளி நோயானது த்ரெட்டிங் செய்வதால் சிறு புண் உண்டாகி அதன் மூலம் தூண்டப்பட்டு மற்ற இடங்களுக்கப் பரவக்கூடும்.

🌠மேலும் சிலருக்க மயிர்க்கால்களின் வேரில் நோய்த் தொற்று ஏற்பட்டு சிறு கொப்பளங்களும் ஏற்படலாம்.
🌠அது தவிர த்ரெட்டிங் செய்துவிடுபவர்களின் கையில் ஏதேனும் நோய்த்தொற்று இருந்தால் அவர்களிடமிருந்தும் பரவலாம். குறிப்பாக கர்ப்பிணிகள் த்ரெட்டிங் செய்துகொள்வது ஆபத்தானது.
🌠சரும புற்றுநோய் வரும் வாய்ப்புள்ளது தெரியுமா? உங்கள் சருமம் மிகவும் சென்சிடிவ் என்றால், த்ரெட்டிங் செய்யும்போது, சரும அடுக்கினை மெதுவாக பாதித்து, நாளடைவில் சரும புற்றுநோயை உருவாக்கும். எனவே அடிக்கடி த்ரெட்டிங் செய்யாதீர்கள்.

”புரட்சி வானொலி தனக்கென்று தனித்துவமான முறையில் செய்திகளை வழங்கி வருகின்றது. இங்கே உங்களிற்கு சங்கடமான / இடையூறான பதிவுகள் இருந்தால் அறியத் தாருங்கள். பரிசீலனை செய்யக் காத்திருக்கிறோம். புரிந்துணர்வுடன் தொடரும் தங்களின் ஒத்துழைப்பிற்கு நன்றி!! புரட்சி வானொலியின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமைக்கு உட்பட்டது. அனுமதியின்றி நகல் எடுப்பது தடை செய்யப்பட்டுள்ளது. The Puradsi FM is giving you unique information. Please let us know if there are any unpleasant / obsolete recordings. They will be deleted! All of the Puradsi FM records are patented. Duplicate without permission is prohibited.”

இந்தப் பதிவு உங்களுக்குப் பிடித்தால், கீழே உள்ள Facebook Button இல் க்ளிக் செய்து உங்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்!!

இன்றைய அனைத்துச் செய்திகளையும் படிக்க , இங்கே க்ளிக் செய்யவும்
error: Alert: Content is protected !!