ரோஸ்வோட்டரைப் பயன்படுத்தி மினுமினுக்கும் அழகைப்றெ ஆசையா?

ரோஜாப்பூவை பிடிக்காதவர்கள் எவரேனும் இருக்க முடியுமா? றோஜாவின் மென்மையும் அதன் வாசனையும் எப்போதும் நாசிக்குள் ஒட்டிக்கொண்டு ரசிக்க வைப்பவை ஆகும். இந்த ரோஜா இதழ்களைக் கொண்டு தயாரிக்கப்படுகின்ற ரோஸ்வோட்டர் ஒரு சிறந்த அழகுசாதனப் பொருளாகும்.  அன்பிற்கினிய நேயர்களே, புரட்சி வானொலி – செய்திச் சேவையின் இந்தப் பதிவு பிடித்திருந்தால், தயவு செய்து ஷேர் செய்து உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகம் செய்யுங்கள்.

ரோஸ்வேட்டரானது ரோஜா இதழ்களின் சாற்றில் தயாரிக்கப்படும்  ஒரு வாசனை நீர் ஆகும். அதன் அழற்சியற்ற தன்மைக்கு இது அறியப்படுகிறது. இது தோல் எரிச்சல் , படை மற்றும் தீவிர வறட்சி போன்ற தோல் பிரச்சினைகளுக்கு தீர்வாக அமைகிறது. மேலும், இது தோலின்  pH அளவுகளை பராமரிக்கவும் உதவுகிறது.

இந்த ரோஸ் வோட்டரை நம்மை அழகுபடுத்திக்கொள்ள எவ்வாறு பயன்படுத்தலாம் என்று பார்க்கலாம்.

பேஸ்புக்கில் Like செய்ய!!

1.டோனராகப் பயன்படுத்தலாம்

அதிக பணம் செலவளித்து விலையுயர்ந்த டோனர்கள் வாங்குவதைக் காட்டிலும் குறைந்த விலையில் கிடைக்கின்ற இந்த ரோஸ்வோட்டரை நாம் டோனராகப் பயன்படுத்தலாம். இது தோலினுடைய pH சமநிலையை பராமரிக்க உதவுகிறது. அத்தோடு மற்ற  டோனர் போன்று, தோலை சுத்தப்படுத்தி சருமத்தில் உள்ள அழுக்கு மற்றும் எண்ணெய் ஆகியவற்றை  நீக்க உதவுகின்றது.

2.கிளென்சராகப் பயன்படுத்தலாம்.

ரோஸ்வோட்டரைக் கொண்டு முகத்தை ஒரு பஞ்சினால் சுத்தப்படுத்தகின்றபோது முகத்திலுள்ள கிருமிகள், அழுக்குகள் ஆகியன அகற்றப்பட்டு முகமானது மிகவும் மிருதுவாகவும் பளபளப்பாகவும் ஆகின்றது.

3.மேக்கப் ரிமூவராக பயன்படுத்தலாம்.

நீங்கள் முகத்திற்கு செய்த ஒப்பனைகளை வீட்டிற்கு வந்ததும் கலைத்துக்கொள்வதற்கு கஸ்டப்படகிறீர்களா? கவலைய விடுங்க.   உங்களின் அலங்காரத்தை  நீக்கிவிட இந்த ரோஸ்வோட்டரை  பயன்படுத்தலாம். தேங்காய் எண்ணெயில் ஒரு சில துளிகள் ரோஸ்வோட்டர் சேர்த்து, ஹாட்டன் துணியினால் மேக்கப்பை அகற்றிக்கொள்ளலாம். அதன்பின்பு முகமானது மிகவும் மிருதுவாக காணப்படும்.

4.கண்வீக்கம் மற்றும் கருவளையத்தை நீக்குவதற்கு பயன்படுத்தலாம்.

உங்களுடைய கண்களில் ஏற்படும் வீக்கம் மற்றும் கருவளையங்களின் தொல்லை ஆகியவற்றைத் தீர்ப்பதற்கு இந்த ரோஸ்வோட்டரைப் பயன்படுத்தலாம். ஒரு சிறிய பஞ்சில் ரோஸவோட்டரை நனைத்து கண்களின் கீழே வைத்தக் கொள்ளுங்கள். கண்களுக்க குளிர்ச்சியைக் கொடுப்பதுடன் கருவளையங்களையும் போக்கும்.

5.முகப்பருக்களிற்குச் சரியான சிகிச்சையளிக்கின்றது.

ரோஸ்வோட்டரில்  பாக்டீரியா எதிர்ப்பு தன்மைகள் இருப்பதால் நீங்கள் இதை முகப்பருவுக்கு சிகிச்சையளிக்கவும் பயன்படுத்தலாம். ரோஸ் வோட்டர் மற்றும்  எலுமிச்சை சாறு ஆகியவற்றை கலந்து அந்த கலவையை முகப்பருக்களின் மேல் தடவி 20 நிமிடங்கள் ஊறவைத்தப் பின் நீரினால் கழுவிக் கொண்டால் முகப் பருக்களின் தொல்லை இருக்காது.

”புரட்சி வானொலி தனக்கென்று தனித்துவமான முறையில் செய்திகளை வழங்கி வருகின்றது. இங்கே உங்களிற்கு சங்கடமான / இடையூறான பதிவுகள் இருந்தால் அறியத் தாருங்கள். பரிசீலனை செய்யக் காத்திருக்கிறோம். புரிந்துணர்வுடன் தொடரும் தங்களின் ஒத்துழைப்பிற்கு நன்றி!! புரட்சி வானொலியின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமைக்கு உட்பட்டது. அனுமதியின்றி நகல் எடுப்பது தடை செய்யப்பட்டுள்ளது. The Puradsi FM is giving you unique information. Please let us know if there are any unpleasant / obsolete recordings. They will be deleted! All of the Puradsi FM records are patented. Duplicate without permission is prohibited.”

 

 

 

 

error: Alert: Content is protected !!