பெண்கள் கவனத்திற்கொள்ள வேண்டிய அந்த 5 விடயங்கள் – கண்டிப்பாக படியுங்கள்!

  • “மங்கையராயப் பிறப்பதற்கே மாதவம் செய்திடவேண்டும்”  என்பார்கள். உண்மைதான். நாம் பெண்ணாய்ப் பிறந்ததே பெரும் பாக்கியம்தான். அதைவிடப் பெரும் பாக்கியம் நம் உடலும் சருமமும். உடலை மட்டுமல்ல, சருமத்தை மட்டுமல்ல உள்ளத்தையும் அழுக்கின்றி ஆரோக்கியமாக வைத்துக்கொ்ள்ளவேண்டியது ஒவ்வொரு குடும்பப் பெ்ண்ணின் கடமையாகும்.

உங்கள் சருமமானது இறைவன் அளித்த மிகப்பெரும் வரப்பிரசாதம் அதை எப்போதும் சரியான முறையில் கவனித்தக்கொள்ளவேண்டியது நம் அனைவரினதும் கடமை ஆகும். எனவே பெண்கள் தங்களுடைய உடல், அழகு ஆகியவற்றில் எவ்வாறு அக்கறை எடுத்துக்கொள்ளவேண்டும் என்பதற்கு சில வழிமுறைகளைப் பார்க்கலாம் இன்று.

1.நீங்கள் வாங்கும் அழகுசாதனப்பொருட்களை பல முறை யோசித்து வாங்குங்கள்.

பேஸ்புக்கில் Like செய்ய!!

பொதுவாகப் பெண்களுக்கு அழகு சாதனப்பொருட்களை வாங்குவதில் அலாதிப் பிரியம் இருக்கும். ஆனால் அவர்களுக்கு எதை வாங்குவது என்பது தொடர்பில்தான் பெரும் குழப்பம் இருக்கும். எனவே பெண்களே அழகு சாதனப் பொருட்களை வாங்கும்போது பின்வரும் விடயங்களைக் கவனத்திற் கொள்ளுங்கள்.

  • நீங்கள் வாங்கும் பொருள் உங்கள் சருமத்திற்கு  ஏற்றதா?
  • அதனால் ஏதேனும் பக்கவிளைவுகள் உண்டா?
  • அந்தவிலை என்னுடைய பொருளாதாரத்திற்கு ஏற்றதா?

இந்த மூன்று கேள்விகளையும் உங்களை நீங்களே கேட்டுக்கொள்ளுங்கள்.

2.தூங்குவதற்கு முன் மேக்கப்பை அகற்றிக்கொள்ளுங்கள்.

உங்களுக்குத் தெரியுமா நிங்கள் பயன்படுத்துகின்ற மேக்கப் சாதனங்களில் எத்தனை இரசாயனப் பொருட்கள் உள்ளன என்று?! இயற்கையாகவே உங்களுக்கென்று ஒரு சருமம் உண்டு. அந்த சருமத்தை நீங்கள் அழகு படுத்த முயற்சிக்கலாம் ஆனால் அதைப் பராமரிக்க மட்டும் மறந்துவிடாதீர்கள். பகல்வேளையில் போட்ட மேக்கப் அத்தனையும் றோஸ்வோட்டர் போன்ற கிளென்சரால் துடைத்து அகற்றி முகத்தை குளிர்ந்த நிரில் கழுவிவிட்டு தூங்குங்கள். இல்லையென்றால் பருக்கள் கருவளையங்கள் ஆகியவற்றின் பாதிப்பக்கள் ஏற்படும்.

3.அதிகமாக உங்கள் வீட்டிலுள்ள இயற்கையான அழகுசாதனப் பொருட்களை பயன்படுத்துங்கள்.

உங்கள் சமையலறையில் எத்தனை அழகு சாதனப்பொருட்கள் உள்ளன தெரியுமா? தேன், எலுமிச்சை, தக்காளி, காரட், உருளைக்கிழங்கு என அனைத்துமே உங்கள் சருமத்திற்கு நீங்களெ இலகுவாக செய்யக்கூடிய பேசியலிற்கு உதவிபுரிகின்றன. எனவே இரசாயனம் கலந்த பொருட்களை பயன்படத்துவதை விட இயற்கையான  வீட்டிலுள்ள பொருட்களைப் பயன்படுத்திப் பாருங்கள்.

4.தண்ணீரைப் பயன்படுத்துங்கள்.

பெரும்பாலானவர்கள் அறியாத ஒரு விடயம் என்னவென்றால் நாம் சருமத்தை வெளியில்தான் கவனித்தக்கொள்ள முடியும் என்று. ஆனால் உங்கள் சருமத்தை உள்ளேயிருந்து புத்துணர்வாய் வைத்திருப்பது தண்ணீர்தான். எனவே அதிகாத் தண்ணீர் அருந்துங்கள். உங்கள் உடலும் சருமமும் குளிர்ச்சியாக இருக்கும்.

5.கடுமையாக சருமத்தை தேய்க்காதீர்கள்.

சில பெண்கள் அடிக்கடி முகத்திற்கு ஏதாவதொன்றை அப்ளை பண்ணி தேய்த்துக் கொண்டே இருப்பார்கள். ஆனால் அது முற்றிலும் தவறான ஒரு விடயம் ஆகும். எங்களுடைய சருமமானது இயல்பாகவே மென்மையானது. அது மென்துளைகளைக் கொண்டது. அதை நாம் கிறீம் மற்றும் ஏனைய அழகுபடுத்தும் பொருட்களைக்கொண்டு தேய்க்கும்போது அது தன்னுடைய இயல்புத் தன்மையை இழந்து நாளடைவில் கடினமாக மாறிவிடும்.

”புரட்சி வானொலி தனக்கென்று தனித்துவமான முறையில் செய்திகளை வழங்கி வருகின்றது. இங்கே உங்களிற்கு சங்கடமான / இடையூறான பதிவுகள் இருந்தால் அறியத் தாருங்கள். பரிசீலனை செய்யக் காத்திருக்கிறோம். புரிந்துணர்வுடன் தொடரும் தங்களின் ஒத்துழைப்பிற்கு நன்றி!! புரட்சி வானொலியின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமைக்கு உட்பட்டது. அனுமதியின்றி நகல் எடுப்பது தடை செய்யப்பட்டுள்ளது. The Puradsi FM is giving you unique information. Please let us know if there are any unpleasant / obsolete recordings. They will be deleted! All of the Puradsi FM records are patented. Duplicate without permission is prohibited.”

error: Alert: Content is protected !!