உங்கள் முக அமைப்பிற்கேற்ற புருவ அமைப்பு எது தெரியுமா?

பல பெண்கள் எப்போதும் வீட்டு வேலைகள், வெளிவேலைகள் என்று ஓய்வின்றி இயங்கிக்கொண்டே இருக்கின்றார்கள். தூக்கமின்மை, கடின உழைப்பு, சத்துக் குறைவு, கண்களுக்கு அதிக வேலை போன்ற பல்வேறு காரணங்களால் கருவளையமானது ஏற்படுகின்றது. இதனால் முகமானது பொலிவிழந்து காணப்படுகின்றது.

எனவே கண்தொடக்கம் புருவம் வரை பராமரித்து அவற்றின் அழகைப் பேணிக்கொள்வது அவசியம் ஆகும். கண்களை எவ்வாறு பராமரித்து அழகுபடுத்துவது என்று பார்க்கலாம் வாங்க.கண்களுக்கு அதிகமாக ஓய்வு கொடுங்கள். தொடர்ந்து உற்றுப் பார்ப்பதை கொஞ்சம் ஒத்தி வைத்துக் கொள்ளுங்கள்.

தூங்குவதற்கு முன், கண்களுக்கு மை தீட்டும் பழக்கம் உள்ளவர்கள் நன்றாக பேஸ்வோஸ்  போட்டு கழுவ வேண்டும். இல்லாவிட்டால் கண் மையில் இருக்கும் இரசாயனப் பொருட்கள் கண்களில் தங்கி கெடுதலை ஏற்படுத்தும்.

கருவளையம் போக்குவதற்கு இயற்கை மருத்துவத்தில் தயிர் பரிந்துரைக்கப்படுகிறது. தயிர், கஸ்தூரி மஞ்சள், தூய சந்தனம் கலந்து தினமும் கண்ணுக்கு அடியில் தடவி 15 நிமிடம் ஊறவைத்து கழுவினால் கண்ணின் கருவளையம் நீங்கும்.கண்களை சிறியதாகவும் பெரியதாகவும் மாற்றிக் காட்ட ஐலைனரைப் பயன்படுத்துங்கள்.

கண்களின் அழகைப் பார்க்கின்றோம் புரவங்களின் அழகைக் கவனிக்கின்றோமா? அதற்கு சில ஐடியாக்கள் இதோகுறுகிய நெற்றி உள்ளவர்களுக்கு புருவங்களுக்குள் இடைவெளி அதிகம்  இருக்கட்டும்.
நீண்ட நெற்றி உள்ளவர்களுக்கு புருவங்களுக்குள் அதிக இடைவெளி தேவையில்லை.

ஓவல் முகம் உள்ளவர்களுக்கு புருவம் சிறு வளைவுடன் இருந்தால் வசீகரமாக இருக்கும்.
சதுரமான முக அமைப்பு கொண்ட பெண்களுக்கு, லேசாக ஒரு கோடு போல புருவ அமைப்பு இருந்தால், அது அழகாக இருக்காது. புருவம் பெரிதாக அழுத்தமாக இருந்தா ல் அழகு அதிகரிக்கும். புருவ முடிகளின் வரிசையில் உள் பக்கமாக இருப்பவற்றைத்தான் அகற் ற வேண்டும். அதுதான் முகத்தின் சதுரத் தன்மையைத் குறைத்துக் காட்டும்.

வட்ட முக அமைப்பு கொண்ட பெண் களுக்கு புருவம் மிகவும் நீளம் குறைந்ததாய் இருக்க வேண்டும். பருமனாக ஆரம்பித்து, அடுத்தடுத்து க் குறுகிக் கொண்டே இருக்க வேண் டும். வெளிப்புற முடிவில் இருக்கும் தேவையற்ற முடிகளை அகற்றி விடுங்கள்.நீளமான முக அமைப்பு கொண்ட பெண்களுக்கு, எவ்வ ளவுக்கெவ்வளவு நேராக, வளையாமல் இருக்கிறதோ, அவ்வளவுக்கவ்வளவு நல்லது. புருவத்தின் ஓரத்தில் மட்டும் மிகச்சிறு அளவு வளைந்து விடுங்கள்.

”புரட்சி வானொலி தனக்கென்று தனித்துவமான முறையில் செய்திகளை வழங்கி வருகின்றது. இங்கே உங்களிற்கு சங்கடமான / இடையூறான பதிவுகள் இருந்தால் அறியத் தாருங்கள். பரிசீலனை செய்யக் காத்திருக்கிறோம். புரிந்துணர்வுடன் தொடரும் தங்களின் ஒத்துழைப்பிற்கு நன்றி!! புரட்சி வானொலியின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமைக்கு உட்பட்டது. அனுமதியின்றி நகல் எடுப்பது தடை செய்யப்பட்டுள்ளது. The Puradsi FM is giving you unique information. Please let us know if there are any unpleasant / obsolete recordings. They will be deleted! All of the Puradsi FM records are patented. Duplicate without permission is prohibited.”

இந்தப் பதிவு உங்களுக்குப் பிடித்தால், கீழே உள்ள Facebook Button இல் க்ளிக் செய்து உங்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்!!

அனைத்துச் செய்திகளையும் ஒரே க்ளிக்கில் படிக்க, இங்கே க்ளிக் செய்யுங்கள்!!
error: Alert: Content is protected !!